அமெ.வில் கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகளை பலாத்காரம் செய்த பாதிரியார் - பிரேசிலில் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் கன்னியாஸ்திரி முகாமில் பயிற்சி பெற வந்த சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியாரை பிரேசில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதியில் கிறிஸ்துவ மத தொண்டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னியாஸ்திரி முகாமை நடத்தி வந்தவர் பாதிரியார் விக்டர் அர்டன் பெர்ணார்ட் (53). இவர் மீது, முகாமில் பயிற்சி பெற வந்த 13 வயது சிறுமியை சுமார் 10 ஆண்டு காலம் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண்ணும், தன்னையும் பாதிரியார் விக்டர் தனது 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவித்தார்.
மேலும், 'நான் கடவுளின் மனிதன் என்னுடன் நெருக்கமாக இருந்தால் உங்களின் கன்னித்தன்மைக்கு பாதிப்பு வராது' எனக் கூறியே விக்டர் இந்தக் கொடூரத்தை செய்து வந்தது விசாரணையில் உறுதியானது.
தொடர் புகாரைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு விக்டர் தலைமறைவானார். அவர் பிடிபட்டால் அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில் அமெரிக்க போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் விக்டர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரையாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் நேற்று விக்டரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அவருடன் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
கைதின் போது, அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், பென்டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது பிரேசில் போலீசார் வசம் உள்ள விக்டர், விரைவில் அமெரிக்க போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications