துப்பாக்கி லைசன்ஸ் சட்டம்: திருத்தக்கோரி யுஎஸ் பாராளுமன்றத்தில் ‘உள்ளிருப்புப் போராட்டம்’!
வாஷிங்டன்(யு.எஸ்): துப்பாக்கி லைசன்ஸ் சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரி, அமெரிக்க பாராளுமன்ற காங்கிரஸ் சபையில் ஜனநாயகக் கட்சியினர் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நள்ளிரவைத் தாண்டியும் இந்த போராட்டம் தொடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெளியிலும் ஆதரவாளர்கள் ஏராளமாக திரண்டுள்ளார்கள்.

ஒர்லாண்டோ டூ வாஷிங்டன்
ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி லைசன்ஸ் உரிமைக்கான சட்டத்தை திருத்தம் செய்ய நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதிபர் தேர்தலிலும் இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜார்ஜியா மாநிலத்தைச் சார்ந்த மூத்த உறுப்பினர் ஜான் லூவிஸ், காங்கிரஸ் சபையின் கோடைகால விடுமுறைக்கு முன்னதாக, துப்பாக்கி லைசன்ஸ் சட்ட திருத்த மசோதாவை வாக்கு எடுப்புக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்கும் வரை சபையின் மத்தியில் தரையில் அமர்ந்து' உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.

வாக்கெடுப்பு இல்லையென்றால் 'நோ’ விடுப்பு
அவருக்கு ஆதரவாக நாற்பதுக்கும் மேற்பட்ட ஜன் நாயகக் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக கோதாவில் இறங்கி, சபை மத்தியில் தரையில் அமர்ந்து கோஷங்கள் ‘ No Bill No Break' என்று எழுப்பினர்.
அதாவது துப்பாக்கி லைசன்ஸ் சட்ட திருத்த மசோதாவை வாக்கெடுப்பிற்கு அனுமதிக்காத பட்சத்தில், சபைக்கு கோடை விடுமுறை விட அனுமதிக்க மாட்டோம் என்று புதிய வடிவிலான போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தால் சபை நடவடிக்கைகள் முடங்கின. தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தடைசெய்யப்பட்டன. பெரிஸ்கோப் என்ற மொபைல் ஆப் மூலம் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள், தங்கள் செல்போன் மூலம் வீடியோக்கள் எடுத்து பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
தொலைக்காட்சிகளும் அந்த வீடியோக்களை ஒளிபரப்பி வருகின்றன.

மீண்டும் ஒரு இன உரிமைப் போராட்டம்?
இந்த போராட்டத்தை அறிவித்து முன் நடத்திச் செல்லும் உறுப்பினர் ஜான் லூவிஸ் இன உரிமை போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர், சிறையில் பல தடவை மூர்க்கமாக தாக்கப்பட்டவர்.
அமைதி வழியில் மீண்டும் ஒரு போராட்டத்தை, நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக முன்னெடுத்துச் செல்வது அவசியமாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெறும் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தை, இன உரிமைப் போராட்டத்திற்கு இணையானது என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் தான் தலைவர்!
ஜனநாயகக் கட்சியின் பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். செனட் உறுப்பினர்களும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தொலைக்காட்சிகள் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் அதிபர் பில் க்ளிண்டன். இவர் தான் தலைவர் என்று ஜான் லூவிஸை புகழ்ந்துள்ளார்.
அவைத் தலைவர் பால் ரயன் , இது அரசியல் காரணங்களுக்கான போராட்டம் என்று வர்ணித்துள்ளார்

நாம வேற வேலையைப் பார்ப்போமே!
குடியரசுக்கட்சி உறுப்பினர்களோ, ஜைக்கா வைரஸை கட்டுப்படுத்த வேண்டியது தான் இப்போதைய அவசியத் தேவை. அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பான மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவை அலுவலில் எடுத்துக்கொண்டார்கள்.

மைக்கெல்லாம் உடைக்கல பாஸ்..
ஜைக்கா மசோதாவுக்கான வாக்கெடுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, ஜனநாயகக் கட்சியினரோ. No Bill No Break' என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
அவை மத்தியில் தரையில் அமரந்தவாறு தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மைக் எடுத்து உடைப்பது, சேர்களை தூக்கி எறிவது போன்றெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
இவ்வளவுக்கும் மசோதா தாக்கல் செய்தாலும் அதை வெற்றிச் செய்யும் அளவுக்கு, ஜனநாயக்கட்சிக்கு மெஜாரிட்டி எல்லாம் இல்லை. துப்பாக்கி லைசன்ஸ் சட்ட திருத்த மசோதாவுக்கு, எதிராக குடியரசுக் கட்சியினரை வாக்களிக்க வைத்து, தேர்தல் களத்தில் அவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட வைப்பதுதான் நோக்கம்.
அதிபர் தேர்தலோடு, காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் தேர்தலும் நடைபெற உள்ள நேரத்தில், இதெல்லாம் அரசியலில் சகஜம்தானப்பா.. ஆனாலும் அந்த டைமிங் அசத்தல்தான்!
-இர தினகர்
-
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications