25 ஆண்டில் இதுவே முதல்முறை.. சீனாவை சினம் கொள்ள வைத்த நான்சி - தைவான் சென்றது ஏன்? அவரே சொல்கிறார்
தைவான்: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயாகர் நான்சி பெலோசி, தைவான் நாட்டு மக்களுடன் அமெரிக்கா என்றும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
முதல்கட்டமாக சிங்கப்பூருக்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அமெரிக்க சபாநாயகரின் இந்த ஆசிய பயணத்தில் தைவானும் இடம்பெற்று இருந்தது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. நான்சி பெலோசி தைவான் வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.

சீனா எதிர்ப்பு
"நான்சி பொலோசி தைவான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி." என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பை தொடர்ந்து நான்சி பெலோசி தைவான் செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது.

25 ஆண்டுகளில் முதல் முறை
இந்த நிலையில் தனது பயணத்திலும் பின்வாங்காமல் அவர் தைவானுக்கு இன்று இரவு 8:15 மணியளவில் சென்றடைந்து இருக்கிறார். தைவான் சென்ற அவரை அந்நாட்டு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். நாளை தைவான் அதிபர் சாய் இங் வென்னை நான்சி சந்திக்க இருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க அரசின் உயர்பொறுப்பில் இருப்பவர் சீனா வருவது இதுவே முதல்முறை.

நான்சி அறிக்கை
இந்த நிலையில் ட்விட்டரில் நான்சி பெலோசி பதிவிட்டுள்ளதாவது, "தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் அசைக்க முடியாத நிலைபாட்டை எங்கள் குழு மதிக்கிறது. தைவான் அரசுடனான எங்கள் ஆலோசனை, ஒருநாடுகளிடையேயான உறவு, இந்தோ - பசிபிக் பகுதியில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதில் இருநாடுகள் கொண்டுள்ள ஆர்வத்தை உறுதிபடுத்துகிறது.

அமெரிக்கா துணை நிற்கும்
தைவானில் வசிக்கும் 2.3 கோடி மக்களுடன் அமெரிக்கா துணை நிற்பது முன்பை காட்டிலும் தற்போது முக்கியமானது. இந்த பயணம் தைவான் - அமெரிக்கா உறவுகள், அமெரிக்கா - சீனா கூட்டறிக்கைகளுக்கு எதிரானது அல்ல. இயல்பு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications