For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி சான்றிதழ்.. டுபாக்கூர் டைம்ஸ் கவர்.. டிரம்ப் ஆபீஸ் கண்ணில் மண்ணைத் தூவிய பலே பெண்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : அமெரிக்காவில் போலியான சான்றிதழ்களுடன் வெளியுறவுத்துறையில் உள்ள ஒரு பிரிவில் துணை உதவிச் செயலாளர் பதவியை மினா சங்க் என்பவர் வகித்து வருவது அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் டிரம்ப் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

மினா சங்க் என்பவர் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியுறவுத்துறையின் சிஎஸ்ஓ பிரிவின் துணை உதவிச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்தில் சிலர் போலியான கல்வித்தகுதியை சமர்ப்பித்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மினா சங்க் சர்ச்சை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் மாணவி என்று தன்னுடைய பயோடேட்டாவில் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய லிங்க்டு இன் உள்ளிட்ட வலைதளங்களிலும் போலியான கல்வித்தகுதியை பதிவிட்டுள்ளார்.

போலியான கல்வித்தகுதி

போலியான கல்வித்தகுதி

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் அவர் எம்பிஏ பட்டம் பெற்றதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது அது போலியானது என்றும் அவர் அங்கு 8 வார கோர்ஸ் ஒன்றையே மேற்கொண்டதாக அந்த பல்கலைகழகத்தின் தகவல் மற்றும் விளம்பரத்துறை தலைவர் கென்னி தெரிவித்துள்ளார்.

பின்வாங்கிய டிரம்ப்

பின்வாங்கிய டிரம்ப்

இதேபோல மினா சங்கை கடந்த ஆண்டுகளில் பல உயர் பதவிகளுக்கு பரிந்துரைத்த அதிபர் டிரம்ப், பின்பு பல்வேறு கண்டனங்களை அடுத்து அதிலிருந்து பின்வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் இதேபோல சிலரை உயர் பதவிகளுக்கு பரிந்துரைத்து அவர் மூக்குடைபட்டதும் நடந்துள்ளது. இத்தகைய நிகழ்வுகள் அவரது நிர்வாகத்திறனை கேள்விக்குறியாக்கி வருவதாக கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

வெளியுறவுத்துறையின் உயர்பதவி

வெளியுறவுத்துறையின் உயர்பதவி

வெளியுறவுத்துறையின் துணை செயலாளராக பதவி வகித்துவரும் மினா சங்க், அந்த பணிக்காக 60 லட்சம் அமெரிக்க டாலர்களை தன்னுடைய ஊதியமாக பெற்று வருகிறார். இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன்பு, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதிலும் மூன்று ஆண்டுகள் அரசுக்கு கணக்கு காட்டாத சம்பவமும் குற்றச்சாட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

புகாருக்கு ஆளான சங்க்

புகாருக்கு ஆளான சங்க்

டைம் மேகசினின் கவர் பக்கத்தில் இவர் இடம்பிடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் போலியானதுதானாம். அப்படி நடக்கவே இல்லையாம். மேலும் அவர் காட்டிய பல சான்றிதழ்களும் போலி என்கிறார்கள். இந்த விவகாரத்தால் டிரம்ப்பின் பெயர் மேலும் பஞ்சராகியுள்ளது.

English summary
US State Department Deputy Secretary Inflated resume
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X