ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங்

Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா அடுத்தடுத்து எண்ணெய் வளம் மிக்க நாடுகளை குறிவைத்து வருவதற்கு 2 முக்கியமான காரணம் உண்டு. முதல் காரணம் அமெரிக்காவில் தற்போது இருக்கும் எண்ணெய் ஆதாரம் அடுத்த 11 வருடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என வந்த ரிப்போர்ட். 2வது அமெரிக்க வல்லரசு நாடாக இருக்கும் வேளையில், அமெரிக்காவுக்கு அனைத்து வகையிலும் போட்டிப்போட்டு வேகமாக வளர்ந்து வரும் நாடாக சீனா விளங்கி வரும் காரணத்தால் அமெரிக்காவின் வளர்ச்சியும், பொருளாதாரமும் குறையும் அச்சம் உருவாக்கியுள்ளது.

இவை இரண்டுக்குமான பதிலாக கச்சா எண்ணெய் விளங்குகிறது. உலகிலேயே அதிகமாக கச்சா எண்ணெய் கொண்ட நாடாக விளங்கும் வெனிசுலா-வை அமெரிக்கா கைப்பற்றியிருக்கும் வேளையில், அடுத்த டார்கெட் ஆக மாறியது 3வது இடத்தில் இருக்கும் ஈரான். சீனா காலம் காலம் காலமாக ஈரான் நாட்டிடம் இருந்து மறைமுகமாக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. தற்போது அமெரிக்காவின் Blockade மூலம் ஈரான் கச்சா எண்ணெய் முடக்கப்பட்டது, அதேவேளையில் சீனாவுக்குமான சப்ளையை முடக்கியுள்ளது. இன்று சீனாவுக்கான கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

China Iran US trump crude oil war US Hormuz Blockade China China Oil Reserves Xi Jinping Strait of Hormuz Pressure on China China Iran Oil Imports Resilience Hormuz Blockade Economic Impact US Strait of Hormuz blockade China China withstands Hormuz blockade Xi Jinping oil reserves strategy China 1 billion barrel petroleum reserve China 20 oil import loss Hormuz Iran oil continues to China China least affected Asian nation Russia 20 oil supply China Saudi Arabia 14 oil to China Hormuz blockade pressure China ceasefire analysts Hormuz blockade China mediation China strategic petroleum reserve 2026 East-West Pipeline Saudi bypass Iran no alternative route Hormuz prolonged Hormuz disruption impact China 100 20 20 14 2026 -

இத்தகைய நிலை வருமென ஏற்கனவே சுதாரித்துக்கொண்ட சீனா பல வேலைகளை முன்கூட்டியே செய்துள்ளதால் தற்போது அமெரிக்காவின் தந்திரமான திட்டம் முயறியடிக்க உள்ளது என்பது தற்போதைய முக்கியமான டிவிஸ்ட். எந்த ஒரு நாடாக இருந்தாலும் சரி எரிபொருள் விலை குறைவாக இருக்கும் போது தான் பொருளாதாரம், வர்த்தகம் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவாகும். வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகளின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்றினால் அமெரிக்கா கையில் உலகின் 40 சதவீதம் பங்கீடு தன்வசம் வரும்.

சீனாவின் பலம்

அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையில் விதித்துள்ள தடை மூலம் சீனாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என நம்புகிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா இந்த பாதிப்பை எளிதில் தாங்கும் நிலையில் உள்ளது என்பது தான் உண்மை.

ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் 14 சதவீதத்தை சவுதி அரேபியாவிலிருந்தும், 11 சதவீதத்தை ஈரானிலிருந்தும், 29 சதவீதத்தை மத்திய கிழக்கின் மற்ற நாடுகளிலிருந்தும் பெற்று வந்தது. ரஷ்யாவிலிருந்து 20 சதவீதமும், உலகின் பிற பகுதிகளிலிருந்து 26 சதவீதமும் எண்ணெய் இறக்குமதி செய்தது. போர் தொடங்கிய பிறகும் ஈரான் எண்ணெய் சீனாவுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஆசிய நாடுகளில் சீனா மிகக் குறைவாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

அமெரிக்காவின் Blockade மூலம் சீனாவுக்கு ஈரானில் இருந்து வரும் 20% எண்ணெய் மொத்தமாக நிறுத்தப்படுகிறது என்றாலும், இது பெரிய அளவில் பாதிக்காததற்கு முக்கிய காரணம் சீனாவின் மாஸ்டர் பிளான்.

10 ஆண்டு மெகா திட்டம்

கடந்த பத்து ஆண்டுகளாக சீனா உலகின் மிகப் பெரிய எண்ணெய் சேமிப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் 100 கோடிக்கும் (1 பில்லியன்) மேற்பட்ட பேரல் எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே ஈரான் எண்ணெய் விநியோகம் இரண்டு மாதங்கள் முழுமையாக நின்றாலும் சீனாவின் அவசர இருப்பில் வெறும் 10 சதவீதம் மட்டுமே குறையும். இது சீனாவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனா இத்தகைய நிலைமை வரும் என முன்கூட்டியே கணித்து பல ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளது. போர் தொடங்கியதும் ஈரான் எண்ணெய் தொடர்ந்து வந்தது சீனாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் வெற்றியை காட்டுகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட சீனா குறைவாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு இந்த நீண்டகால திட்டமிடல் தான் முக்கிய காரணம்.

இதேவேளையில் ஈரானுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து இருப்பது மட்டும் அல்லாமல், ஈரான் மீதான எண்ணெய் போக்குவரத்து கட்டுப்பாட்டை நீக்க சீனா தொடர்ந்து போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் போர் நிறுத்ததிலும், பேச்சுவார்த்தையும் சீனாவின் தலையீடு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீனா அமெரிக்காவின் Blockade செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+