சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி!
உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடி வரும் வரை காத்திருக்கும், வந்த பின்பு தான் அதிரடியாக ஆக்ஷன் எடுக்கும். ஆனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா அப்படி இல்லை, ரெசிஷன் வருவதற்கான சாத்தியங்களை உணர்ந்த நிலையில் இப்போதே அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா அரசு இப்போதே மிகப்பெரிய அளவிலான பணத்தை நகர்த்தத் தொடங்கிவிட்டது. அமெரிக்க பத்திரங்களை விற்று, தங்கத்தை குவித்து வருகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சீனாவை கண்டு மற்ற நாடுகளும் ரெசிஷனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.'

ஹார்முஸ்: அமெரிக்காவின் இலக்கு சீனா தான்
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுகள் பாகிஸ்தானில் தோல்வியடைந்த நிலையில், இப்போது ஹார்முஸ் நீரிணை தடை இரண்டாம் கட்டத்துக்கு சென்றுவிட்டது. இம்முறை தடையை விதிப்பது அமெரிக்கா. டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு செல்லும் கப்பல்களையும் வெளியே வரும் கப்பல்களையும் தடுக்கத் தொடங்கியுள்ளார். இந்தத் தடையின் உண்மையான இலக்கு ஈரான் அல்ல, சீனா தான்.
சீனாவுக்கு ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் இருந்தது. நீரிணை மூடப்பட்டாலும் ஈரான் சீனாவுக்கு அளவுக்கு அதிகமாக கச்சா எண்ணெய் விற்று வந்தது. சீனா இதற்கான பணத்தை உடனடியாக செட்டில் செய்து வந்தது. அந்தப் பணத்தை ஈரான் போருக்கு பயன்படுத்தியது. இந்த சப்ளை செயினை உடைக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஹார்முஸ் தடை மூலம் சீனாவின் எண்ணெய் விநியோகத்தை துண்டித்து அதன் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னெச்சரிக்கை
சீனாவின் மத்திய வங்கியான பீப்புள்ஸ் பேங்க் ஆஃப் சீனா (பிபிஓசி) தனது நிதி அமைப்பில் இருந்து சுமார் 1 டிரில்லியன் யுவானை திரும்பப் பெற்றுள்ளது. இதனால் வணிக வங்கிகளிடம் கடன் கொடுக்க பணம் குறையும். கடன் பெறுவது கடினமாகும். இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். இந்த நிதி கட்டுப்பாடுகள் உண்மையான ரெசிஷன் வரும்போது பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக சீனா எடுத்த முடிவு.
அமெரிக்காவுக்கு எதிரா நடவடிக்கை
இதேவேளையில் சீனா அமெரிக்க அரசு பத்திரங்களை விற்று வருகிறது. தற்போது சீனா அமெரிக்க பத்திரத்தில் வெறும் 694 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை மட்டுமே வைத்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். 2013-ல் இது 1,317 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் சீனா 2,313 டன் தங்கத்தை வைத்துள்ளது. இதன் மதிப்பு 343 பில்லியன் டாலர். கடந்த 17 மாதங்களில் மட்டும் சீனா 300 டன்னுக்கு மேல் தங்கம் வாங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் சீனா எதிர்கால பொருளாதார நெருக்கடிக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துகின்றன.
சீனாவின் முக்கிய ஆயுதம்
பொருளாதார நடவடிக்கைகளை தாண்டி சீனா அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான அரிய உலோகங்களின் (ரேர் எர்த் எலிமென்ட்ஸ்) ஏற்றுமதியை சீனா தடை செய்துள்ளது. ஒரு டோமஹாக் ஏவுகணைக்கு 20 கிலோ அரிய உலோகங்கள் தேவை. காலியம், ஜெர்மானியம், டங்ஸ்டன் போன்றவை ஏவுகணைகள், ட்ரோன்கள், ரேடார் அமைப்புகளுக்கு அத்தியாவசியம்.
இவை பெரும்பாலும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் ஆயுதம் என்றால், அரிய உலோகங்கள் சீனாவின் ஆயுதம். சீனா இதை பயன்படுத்தும் திட்டத்தை தெளிவாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரெசிஷன்
இந்த ரெசிஷன் சீனாவுக்கு மட்டும் வராது, இது உலகளாவிய பாதிப்பாக மாறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மூடீஸ் நிறுவனம் அமெரிக்காவில் ரெசிஷன் வருவதற்கான வாய்ப்பை 49 சதவீத அளவில் இருப்பதாக கூறியுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் 30 சதவீதமாக (முன்பு 25 சதவீதம்) உயர்த்தியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் ரெசிஷனுக்கான உயர் அபாயம் உள்ளது.
ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அறிக்கையின்படி, வளைகுடா நாடுகள் 2026-ல் எதிர்மறை அதாவது மைனஸ் அளவில் பொருளாதார வளர்ச்சியை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போர் காரணமாத ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத்துக்கு 120 பில்லியன் முதல் 194 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என்றும், 37 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்தியா தப்பாது
இந்தியாவும் இதில் இருந்து தப்பாது. மூடீஸ் இந்தியாவின் 2026-27 வளர்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. பணவீக்க மதிப்பீடு 2.4 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது. மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.4 சதவீதமாக உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 3.87 சதவீதம். எரிபொருள் விலை இன்னும் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போர்: தங்கம் விலைக்கு அடுத்தடுத்து செக்.. நாளை சந்தை எப்படி இருக்கும்? -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications