Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானில் கமேனி ஆட்டம் ஓவர்? டிரம்ப் போடும் உத்தரவு! அடுத்த 10 நாளில் எல்லாமே மாற போகுதாம்! பகீர்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலே இருக்கிறது. 10 முதல் 15 நாட்களில் டீலை போடவில்லை என்றால் அமெரிக்கா நிச்சயம் தாக்குதலை நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றம் கடந்த சில வாரங்களில் உச்சத்தில் இருக்கிறது. அணு ஆயுதத் தடை தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஈரானில் உடன்படவில்லை என்பதால் அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்றால் தாக்குதலுக்கும் அமெரிக்கா ரெடியாக உள்ளது.

US Strikes on Iran May Target Leaders Seek Regime Change American military waiting for Trump order

சாதாரணத் தாக்குதலாக இருக்காது

ஆனால், இந்த முறை தாக்குதல் சாதாரணமாக இருக்காதாம். ஈரானில் உள்ள முக்கிய நபர்களைக் காலி செய்யும் வகையில் ஒரு விரிவான தாக்குதல் திட்டத்தை அமெரிக்க ராணுவம் ரெடி செய்துள்ளது.. மேலும், ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது போன்ற திட்டமும் கையில் இருக்கிறதாம். அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்காகவே காத்திருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்தால், ஈரானுடன் ஒரு தீவிர மோதலுக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்பதே இதைக் காட்டுகிறது. ஈரானியப் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்கும் வகையில் ஒரு திட்டத்தை அமெரிக்கா தயாராக வைத்திருக்கிறது. ஒரு முறை தாக்குதல் தொடர்ந்தால் அது பல வாரங்கள் நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆட்சி மாற்றம்

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை.. அங்கு மக்களாட்சி வர வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அமெரிக்க ராணுவத்திடம் இருந்தும் இதுபோன்ற தகவல்கள் வந்துள்ளது கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளது. அதேநேரம் எந்தத் தனி நபர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் அல்லது எப்படி ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் என்பது குறித்த விவரங்களை அந்த அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை.

தற்போதைய சூழலில் மத்தியக் கிழக்கில் டிரம்ப் பெரியளவிலான படைகளைக் குவித்துள்ளார். மிகப் பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அங்குக் குவிக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களும் கூட இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஈரானில் அடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும் என்பதே பெரியளவில் கவனம் ஈர்ப்பதாக அமைகிறது.

முதல்முறை இல்லை

அதேநேரம் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இது முதல்முறை இல்லை. முன்னதாக 2020ஆம் ஆண்டு, ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமானியைத் தாக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் வெளிநாட்டு உளவு மற்றும் துணை ராணுவப் பிரிவான குட்ஸ் படையை அவர் வழிநடத்தி வந்த அவரை, அமெரிக்கா தாக்கிக் கொன்றது. முன்னதாக 2019ல் ஈரானின் துணை ராணுவப் படையையே பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் அரசு அறிவித்தது. உலக நாட்டின் அதிகாரப்பூர்வ ராணுவப் படையைத் தீவிரவாதிகள் என அமெரிக்கா அழைத்தது அதுவே முதல்முறையாகும்.

10 நாள் தான் டைம்

எல்லாவற்றையும் கனெக்ட் செய்து பார்த்தால் ஈரானில் ஆட்சி மாற்றம் நோக்கியே அமெரிக்கா செல்வது தெளிவாகத் தெரிகிறது. டிரம்ப் கூட ஈரானில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கக்கூடிய விஷயம் தான் என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். பேச்சுவார்த்தையில் நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், அதேநேரம் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான சம்பவங்கள் நடக்கலாம் என எச்சரித்தார். மேலும், டீல் போட 10 முதல் 15 நாட்கள் மட்டுமே அவர் அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஈரானை அமெரிக்கா தாக்கினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்குப் பதிலடி தரப்படும் என ஈரான் புரட்சிகரப் படை எச்சரித்துள்ளது. மத்தியக் கிழக்கில் ஜோர்டான், குவைத், சவுதி, கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவுக்குத் தளங்கள் உள்ள நிலையில், அங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் மிரட்டியுள்ளது. இப்படிப் பதற்றமான ஒரு சூழலே அங்கு உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+