இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil
ரெக்ஸ் டில்லர்சன்
Reuters
ரெக்ஸ் டில்லர்சன்

ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை எதிர்கொள்ள, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ''ஒத்துழைப்பு உறவில்" இந்தியா கூட்டாளியாக இருப்பதாகக் கூறிய அவர், ஜனநாயம் இல்லாத சமூகமான சீனாவிடம் இதேபோன்ற உறவை அமெரிக்கா வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.

தென் சீன கடல் சர்ச்சையை எடுத்துக்காட்டாகக் கூறி, சீனா சில சமயம் சர்வதேச மரபுகளை மீறி நடந்துகொள்வதாக கூறினார்.

டில்லர்சன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ள நிலையில் இக்கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளுக்கு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்ல உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
EPA
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

வாஷிங்டனில் உள்ள ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் சிந்தனையாளர்கள் குழுவில் பேசிய டில்லர்சன் "சீனாவுடன் ஆக்கப்பூர்வமான உறவுகளை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால், விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைவுக்கு சீனா விடுக்கும் சவாலை கண்டு துவண்டுவிட மாட்டோம். அண்டை நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நண்பர்களுக்கும் பாதகம் ஏற்படுத்துவே சீனா விடுக்கும் சவால்கள்" எனக் கூறினார்.

இந்தியாவும், அமெரிக்காவும் உலக கூட்டாளிகளாக வளர்ந்துகொண்டிருப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் ஜனநாயகத்தில் மட்டும் இணக்கமாக இல்லை எனவும் தொலைநோக்கு எதிர்காலத்தையும் பகிர்ந்துகொள்வதாக கூறினார்.

உலகில் மைய இடத்தை எடுக்கும் புதிய சகாப்தத்தில் சீனா நுழைந்துள்ளது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனா கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய பிறகு, டில்லர்சன்னிடம் இருந்து இக்கருத்துக்கள் வந்துள்ளன.

"தென் சீன கடலில் சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களை" விமர்சித்த அவர், அமெரிக்காவும் இந்தியாவும் மதிக்கும் சர்வதேச சட்டம் மற்றும் நெறிமுறைகளுக்குச் சீனா சவாலாக இருப்பதா தெரிவித்தார்.

இந்தியாவைப் பாராட்டி... சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
Reuters
இந்தியாவைப் பாராட்டி... சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா

"பிற நாடுகள் தங்களது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு, அவர்களைத் தயார்படுத்தும் வேலையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட வேண்டும். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்கள் மற்றும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு இருநாடுகளுக்கும் பிராந்தியத்தில் அதிக வலிமை இருக்க வேண்டும்." எனவும் டில்லர்சன் கூறினார்.

டில்லர்சன்னில் பேச்சுக்குப் பிறகு அறிக்கை மூலம் பதிலளித்த வாஷிங்டனில் உள்ள சீனா தூதரகம்," சீனா மேலாதிக்கத்தையும் விரிவாக்கத்தையும் விரும்பவில்லை. மற்றவர்களின் நலன்களைப் பாதிக்கும் வளர்ச்சி எங்களுக்கு ஒருபோதும் தேவையில்லை" என கூறியுள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் நெறிமுறைகளைச் சீனா பாதுகாப்பதாவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+