டல் அடிக்கும் சுற்றுலா துறை.. டிரம்ப் போட்ட வரியால் அமெரிக்காவுக்கு இப்படி ஒரு சிக்கலா!
வாஷிங்டன்: வரி விவகாரம், வர்த்தக போர், மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள், டாலருக்கு எதிரான சிக்கல்கள் என அனைத்தும் சேர்ந்து தற்போது அமெரிக்காவின் சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்திருக்கிறது.
கடந்த வாரம் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் சூப்பர் ஹீரோக்களைப் போன்று வேடமணிந்து புகைப்படம் எடுத்தக்கொள்ளும் திருவிழா நடந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை நடந்த திருவிழா டல்லடித்தது.

அமெரிக்காவின் தேசிய சுற்றுலா அலுவலகத்தின் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் மட்டும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 11.6% குறைந்திருக்கிறது. சீனாவிலிருந்து மட்டும் 1% பயணிகள் வரத்து குறைந்திருக்கிறது. பயணிகள் வரத்து குறைந்ததால் டெல்டா விமான நிறுவனம் தனது சேவையை விரிவாக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக சிறிய நாடுகளிலிருந்து அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும். ஆனால், பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், நம்மூர் ரூட் பஸ்ஸை போல இந்த விமான நிறுவனம் சில இடங்களுக்கு சேவையை கட் செய்திருக்கிறது. இதனால் அமெரிக்காவின் பிரபல சுற்றுலா பகுதியான லாஸ் வேகாஸில் சுற்றுலா வருமானம் குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. டூரிசம் எக்னாமிக் எனும் நிறுவனம் சுற்றுலா பயணிகளின் வரத்து எப்படி இருக்கும்? வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை கணித்து சொல்லும்.
பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் முன்பு கணித்திருந்தது. ஆனால் தற்போது தனது கணிப்பை மாற்றியிருக்கிறது. வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 9.4% வரை குறையும் என்று கூறியிருக்கிறது.
மறுபுறம் யூரோவுக்கு எதிராக டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால் ஐரோப்பாவிலிருந்து பயணிகள் பலர் அமெரிக்காவுக்கு படையெடுத்துள்ளனர். இவர்களுக்கு அரசியல் சூழல் பற்றி எந்த கவலையும் இல்லை. ஆனால் சீனாவிலிருந்து அமெரிக்கா செல்வோருக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விதித்திருக்கிறது. இவை அமெரிக்காவின் சுற்றுலா துறையை கடுமையாக பாதித்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். டிரம்பின் நடவடிக்கைகள் இப்படியெல்லாம் அமெரிக்காவை பாதிக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
அமெரிக்காவின் சுற்றுலாத் துறை மொத்த மதிப்பு $2.36 டிரில்லியன். இந்த துறையின் வருமானத்தில் வெளிநாட்டு பயணிகள் குறிப்பிட்ட அளவுக்கு பங்கு வகிக்கின்றனர். அதாவாது 10-20% வருமானம் வெளிநாட்டு பயணிகள் மூலம் வருகிறது. 2.36 டிரில்லியன் அமெரிக்க டாலரில் 20% எனில் $354 பில்லியன் வருகிறது. இதில் 11.6% பயணிகளின் வருகை குறைந்திருக்கிறது எனில், $41.06 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
விமான நிறுவனங்கள், கைவினை கலைஞர்கள், சுற்றுலா வழிக்காட்டிகள், ஓட்டல்கள், உணவகங்கள் என அனைத்து துறையும் சுற்றுலாவுடன் பின்னி பிணைந்திருக்கிறது. அப்படி இருக்கையில் சுற்றுலாத்துறையின் வருமானம் பாதிப்பு, இவர்களையும் பாதித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications