முதுகில் குத்திய அமெரிக்கா.. டாய்லெட் பேப்பராக துடைச்சி வீசிட்டாங்க.. புலம்பும் பாக். ராணுவ அமைச்சர்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவும், பாகிஸ்தானும் நெருக்கமாக உள்ளன. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்கா தங்களின் தேவைக்காக பாகிஸ்தானை பயன்படுத்துகிறது. டாய்லெட் பேப்பரை விட மோசமாக பாகிஸ்தானை பயன்படுத்தி எறிந்துவிட்டது என்று நாடாளுமன்றத்தில் புலம்பி உள்ளார்.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் போர் நடந்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. இதில் பயந்துபோன பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்த போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதனை நம் நாடு ஏற்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‛‛டொனால்ட் டிரம்ப் தான் போரை நிறுத்தினார்.. அவர் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும். இதனால் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்'' என்று கூறி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர்
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு அமெரிக்கா, பாகிஸ்தானை தங்கள் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டு டாய்லெட் பேப்பரை விட மோசமாக தூக்கி எறிந்துவிட்டது என்று புலம்பி தள்ளியுள்ளார்.
அமெரிக்காவை நம்பி மோசம் போய்விட்டோம். தேவையில்லாமல் ஆப்கானிஸ்தானை பகைத்து தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளோம் என அழாத குறையாக புலம்பி தள்ளியுள்ளார். இதுதொடர்பாக கவாஜா ஆசிப் பேசியதாவது:
அமெரிக்காவுடன் சேர்ந்தது தவறு
‛‛1999ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கூட்டணி வைத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பாகிஸ்தான் தலையீட்டது. இது தான் பெரிய ஆபத்தாக மாறியது. இது மிகப்பெரிய தவறு. இந்த தவறின் நீண்ட கால விளைவுகளை பாகிஸ்தான் இன்றும் கூட முழுமையாக அனுபவித்து வருகிறது.
நமக்கு சம்பந்தம் இல்லாத போர்களில் தலையீடு செய்ததால் இன்று வரை நாடு நிலையற்ற தன்மையுடன் உள்ளது. குறிப்பாக 1999க்கு பிறகு அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்ததால் ஏற்பட்ட இழப்புகள் மிக மோசமானவை. ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் ஈடுபட வேண்டிய தேவையே இல்லை. ஆனால் ‛ஜிஹாத்' என்ற பெயரில் பாகிஸ்தானியர்களை போருக்கு திரட்டியது பெரும் தவறு.
டாய்லெட் பேப்பரை விட மோசம்
அந்த சமயத்தில் ராணுவ தளபதிகளாக இருந்த ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிநாட்டுப் போர்களில் சிக்க வைத்தனர். நம் நாட்டை கூட்டாளிகள் கைவிட்ட பிறகும், நாம் அதன் விளைவுகளை தனியாக சந்தித்து வருகிறோம். அமெரிக்கா தனது குறிப்பிட்ட நோக்கத்துக்காக நம்மை பயன்படுத்திவிட்டு டாய்லெட் பேப்பரை விட மோசமாக தூக்கியெறிந்துவிட்டது'' என புலம்பி தள்ளினார்.
புலம்பலின் பின்னணி
இந்த கதறலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த1996 முதல் 2001ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அண்டை நாடாக உள்ள ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்தது. அப்போது அல்குவைதா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி செயல்பட்டு வந்தது.
இந்த அல்குவைதா 9/11 என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001 செப்டம்பர் 11ம் தேதி நடந்தது. இந்த தாக்குதலை அல்குவைதா பயங்கரவாதிகள் நடத்தினர். இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்கா, அல்குவைதா அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் ஆப்கானிஸ்தானில் போரை தொடங்கியது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக போர்
‛ஆபரேஷன் எண்டியூரிம் ஃப்ரீடம்' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள், தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்து விரட்டியது. இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு உதவி செய்தது. தாலிபான்களின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்காவுக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் வழங்கியது. இதில் அமெரிக்கா வெற்றியும் பெற்றது.
அதன்பிறகு அமெரிக்க படைகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்ததால் தாலிபான்கள் அடங்கினர். கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றின. அப்போது அமெரிக்காவில் ஜோபைடன் அதிபராக இருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை.
தொடரும் மோதல்
இதனால் பாகிஸ்தான் தாலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது. ஆனாலும் இருநாடுகள் இடையேயான உறவு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. சில மாதங்களிலேயே இருவரும் பகையாளியாக மாறி உள்ளன. எல்லையில் அடுத்தடுத்து மோதல் ஏற்பட்டது. இப்போதும் மோதல் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக் இ தாலிபான்கள் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இப்படியான சூழலில் தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக 2001ல் தாலிபான்களுக்கு எதிராக போர் புரிந்ததால் இப்போது வரை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பிரச்சனை தீரவில்லை. ஆதரவாக இருந்த பாகிஸ்தானை அமெரிக்கா டாய்லெட் பேப்பர் போல் பயன்படுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதாக புலம்பி உள்ளார் அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்.
-
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications