அமெரிக்கா போக முயன்ற இந்திய இளைஞர்! வெறும் 40 விநாடிகளில் விசாவை மறுத்த அதிகாரிகள்.. காரணம் இதுதான்
டெல்லி: அமெரிக்கா போக முயன்ற இந்திய இளைஞருக்கு வெறும் 40 விநாடிகளில் அதிகாரிகள் விசாவை மறுத்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த செய்தி விளக்குகிறது.
வழக்கமாக விசா பெறும் நடைமுறையின்போது உண்மை தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். இந்திய இளைஞரும் உண்மையான தகவலை நேர்மையாக கூறியிருக்கிறார். ஆனாலும் விசா மறுக்கப்பட்டிருக்கிறது.

விசா மறுப்பு
வெளிநாடுகளுக்கு விசா பெறுவது ஒரு முக்கியமான நடைமுறை. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு விசா பெறுவது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளிப்பவர்களுக்கு மட்டுமே விசா பெரும்பாலும் கிடைக்கிறது. இந்திய இளைஞர் ஒருவர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வழியாக விசா பெற முயன்றிருக்கிறார். ஆனால் இந்த நேர்க்காணலில் வெறும் 40 விநாடிகளில் அவருக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரிகளின் கேள்வி
தனக்கு நடந்த சம்பவத்தை இளைஞர் ரெட்டிட் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். தான் எல்லா கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளித்ததாக கூறியுள்ள இளைஞர் விசா மறுத்தது குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இளைஞர் B1/B2 எனப்படும் சுற்றுலா மற்றும் வணிக விசாவுக்கு அப்ளை செய்திருக்கிறார். தூதரகத்திலிருந்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அதிகாரிகள் ஏன் அமெரிக்கா செல்ல விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இளைஞர் சொன்ன பதில்கள்
ஃப்ளோரிடாவுக்கு 2 வார விடுமுறைக்கு செல்வதாகவும், இந்த நாட்களில் டிஸ்னி வோர்ல்டு, யுனிவர்செல் ஸ்டுடியோ, கென்னடி விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றை சுற்றிபார்க்க உள்ளதாகவும் இளைஞர் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச பயணம்
அடுத்த கேள்வி, "இதற்கு முன்னர் சர்வதேச பயணம் மேற்கொண்ட அனுபவம் இருக்கிறதா?" என கேட்கப்பட்டிருக்கிறது. இல்லை என்று பதிலளித்த இளைஞர், அமெரிக்காவுக்கு செல்வதுதான் முதல் சர்வதேச பயணம் என்றும் கூறியிருக்கிறார். மூன்றாவது கேள்வி, "அமெரிக்காவில் நண்பர்கள், சொந்தக்காரர்கள் யாரேனும் இருக்கிறார்களா?" என்று கேட்கப்பட்டிருக்கிறது.
விசா மறுப்புக்கான காரணம்
"ஆமாம் என்னுடைய காதலி அங்கு இருக்கிறார்" என இளைஞர் பதிலளித்துள்ளார். அவ்வளவுதான், வெறும் 40 விநாடிகளில் நேர்காணல் முடிந்திருக்கிறது. இளைஞரின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 214(b) என்கிற பெயரில் விசா மறுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் எல்லா கேள்விகளுக்கும் நியாயமாகத்தான் பதிலளித்தேன். இருந்தாலும் ஏன் விசா மறுக்கப்படுகிறது? என்று இளைஞர் சோஷியல் மீடியாவில் புலம்பியிருக்கிறார்.
விசா மறுப்புக்கான காரணம் பற்றி சோஷியல் மீடியா பயனர்கள் பலரும் பல காரணங்களை அடுக்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர் தனது காதலி பற்றி சொல்லியிருக்க கூடாது என்றும், தன்னுடைய முதல் பயணம் அமெரிக்காதான் என்று கூறியதும் விசா ரத்து செய்யப்பட்டதற்கான முக்கியமான காரணிகளாக குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த விஷயம் முக்கியம்
உண்மை காரணம் இது அல்ல. 214(b) என்கிற பெயரில் விசா மறுக்கப்பட்டிருக்கிறது என்றால், பயணம் செய்யும் நபர், அவருக்கு சொந்த நாட்டில் உள்ள உறவுகள் என்ன என்பது பற்றியும் அந்த உறவுகளின் பிணைப்பையும் அவர் சரியாக தெரிவிக்கவில்லை என்று அர்த்தம். அதாவது, இந்தியாவிலிருந்து நீங்கள் சுற்றுலா செல்கிறீர்கள் எனில், மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். அப்படியெனில் உங்களது குடும்பம், சொத்து, வணிகம், வேலை, கல்வி ஆகியவை இங்கு இருக்க வேண்டும்.
இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இளைஞர் அப்படி குறிப்பிடவில்லை என்பதால்தான் அவரது விசா மறுக்கப்பட்டிருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
விசா நேர்க்காணலில் நேர்மையாக இருப்பது மிக முக்கியம். அதைவிட, புத்திசாலித்தனமாக இருப்பதும் அவசியம் என்றும் பலரும் கூறுகின்றனர். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications