அவரது கால் தைவானில் பட்டாலே.. அதற்கு விலையை கொடுக்க வேண்டியிருக்கும்! சீனா திடீர் ஆவேசம்! என்னாச்சு
பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதற்குச் சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவை ஆண்ட குமிண்டாங் அரசுக்கும் அங்குள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே 1940களில் மோதல் ஏற்பட்டது. அதில் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளுக்கே வெற்றி கிடைத்தது.
இதனால் சீனா ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்டுகள் கன்டிரோலுக்கு சென்றது. அதேநேரம் குமிண்டாங் ஆதரவாளர்கள் வேறு வழியில்லாமல் தைவான் பகுதிக்குச் சென்றனர்.

தைவான் விவகாரம்
அதன் பின்னர் இதே நிலை தான் நீடித்தது. தைவான் நாட்டில் வாழும் மக்கள் தாங்கள் தனி நாடு என்றே சொல்லி வருகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறிய பின்னர், சீனா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றே தொடர்ந்து கூறி வருகிறது. உலக நாட்டுத் தலைவர்கள் ஒரு பேச்சுக்குத் தைவான் தனி நாடு என்று சொன்னாலும் கூட கொந்தளித்துவிடும் சீன அரசு!

உக்ரைன்
எப்போது வேண்டுமானாலும் சீனா தனது ராணுவத்தைக் கொண்டு தைவானை வலுக்கட்டாயமாக தன்னுடன் இணைத்துக் கொள்ளும் என்றே கூறப்பட்டு வந்தது. அதிலும் உக்ரைன் போருக்குப் பின்னர், இந்த யூகங்கள் அதிகமானது. உக்ரைன் மீதான போருக்கு உலக நாடுகள் போதிய எதிர்ப்பு காட்டவிட்டால், சீனாவும் கூட ஹாங்காங், தைவான் பகுதிகள் மீது இதேபோல போர் தொடுக்கும் என்று சர்வதேச வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்

நான்சி பெலோசி
இதனிடையே அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கப் பிரதிநிதியுமான நான்சி பெலோசி தைவான் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இப்போது மலேசியாவில் உள்ள நான்சி பெலோசி, அங்கிருந்து நேரடியாகத் தைவான் நாட்டிற்குச் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டது. தைவானைச் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், நான்சி பெலோசி அங்குச் சென்றால் இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக மோதல் உருவாகக் கூடும்.

சீன இறையாண்மை
இதனிடையே சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீனாவின் இறையாண்மையைக் குலைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்டால் அமெரிக்கா அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய இருக்கும்" என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்தார்.

எதிர்ப்பு
அமெரிக்க அதிகாரிகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது தைவான் செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், நான்சி பெலோசி போன்ற முக்கிய தலைவர் ஒருவர் சென்றால் அது எதிர்காலத்தில் தைவான் மீதான உரிமை கோரலில் சிக்கலைத் தரும் எனச் சீனா கருதுகிறது. இதன் காரணமாகவே அவரது பயணத்திற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Recommended Video

பதிலடி
அமெரிக்காவின் இந்த செயல் மிகவும் ஆபத்தானது என்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்றும் ஐநாவுக்கான சீனா தூதரும் தெரிவித்து இருந்தார். கடந்த வாரம் தைவான் தொடர்பாக ஜோ பைடன் கூறிய கருத்துகளுக்கு அமெரிக்கா நெருப்புடன் விளையாடுவதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாகவே பதிலடி கொடுத்து இருந்தார். தைவான் விவகாரத்தில் சீனா உறுதியாக உள்ள நிலையில், வரும் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications