நன்றி சொல்லும் நாளில்... புயல், பனி, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் அமெரிக்கா!
வாஷிங்டன்: தேங்க்ஸ்கிவிங் டே... நம்ம ஊர் அறுவடைத் திருநாள், பொங்கல் பண்டிகை போல, அமெரிக்காவுக்கு இந்த நாள். இன்று இந்த நன்றி கூறும் நாளைக் கொண்டாடத் தயாராகி வருகிறது அமெரிக்கா.
இந்த நாளையொட்டி அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறதாம். அதேசமயம், நாட்டின் கிழக்குப் பகுதியில் புயல் தாக்குதல், மழைப் பொழிவு, பனிப்பொழிவு ஆகியவை சேர்ந்து மக்களை டென்ஷனாக்கியுள்ளதாம்.

வருடத்தின் மிக முக்கியமான நெரிசல் மிக்க நாள்
அமெரிக்காவில், வருடத்திலேயே எது முக்கியமான போக்குவரத்து நெரிசல் மிக்க நாள் என்றால் அது இந்த நன்றி கூறும் நாள்தான்.

பேரணிகள்.. கொண்டாட்டங்கள்
இந்த நாளின்போது பல்வேறு நகரங்களிலும் பேரணிகள், ஆட்டம், பாட்டம் என்று அமர்க்களப்படுத்துவார்கள் அமெரிக்கர்கள்.

ஷாப்பிங்கும் அமர்க்களப்படும்
அதேபோல ஷாப்பிங்கும் அமர்க்களப்படும். பலூன் விடுவது, விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று ஒட்டுமொத்த அமெரிக்காவே தெருவுக்கு வந்து விட்டதைப் போன்ற பிரமையைப் பார்க்கலாம் இந்த நாளில்.

நியூயார்க்கைக் கலக்கும் மேசி பேரணி
நியூயார்க்கில் ஆண்டுதோறும் நன்றி கூறும் நாளில் மேசி தேங்க்ஸ்கிவிங் பரேட் எனப்படும் பேரணி நடைபெறுவது வணக்கம். இந்தப் பேரணியின்போது 16 மெகா சைஸ் பலூன்களைப் பறக்க விடுவார்கள்.

1971 முதல்
இந்த பலூன் விடு கொண்டாட்டம் 1971ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஆனால் இந்த முறை வானிலை சரியில்லாமல் உள்ளது. இதனால் பலரும் சோகத்தி்ல மூழ்கியுள்ளனர். பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் கொண்டாட்ட குதூகலத்தில் முழுமையாக மூழ்க முடியாத நிலை காணப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு சிறப்பு விருந்துகள்
நன்றி கூறும் நாளையொட்டி அமெரிக்க ராணுவத்தினருக்கு குறிப்பாக பல்வேறு நாடுகளில் முகாமிட்டிருக்கும் வீரர்களுக்கு சிறப்பு விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றன. விதம் விதமான சாப்பாட்டுடன் இந்த விருந்துகள் அமர்க்களப்படுகிறதாம்.

ஆப்கன் ராணுவத்தினரை அழைத்து பாராட்டிய ஒபாமா
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க ராணுவப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 10 வீரர்களை நேரில் அழைத்து பாராட்டி கெளரவித்துள்ளார் அதிபர் ஒபாமா.

புயலால் பாதிப்பு
இந்த வருடம் நன்றி கூறும் நாள் கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கன மழையும், பல பகுதிகளில் பனிப்பொழிவும் மக்களை டென்ஷனாக்கியுள்ளது.

விமான, ரயில் சேவை பாதிப்பு
கிட்டத்தட்ட 6000 விமானங்களின் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 95 விமானங்களை ரத்து செய்துள்ளனர்.

பலத்த காற்று
நியூயார்க் நகரில் பலத்த சூறைக் காற்று மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பிலடெல்பியாவிலும் இதே நிலைதான். பென்சில்வேனியா, ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் சாலைகளில் பனிக ் கட்டிகள் தேங்கி போக்குவரத்தை பாதித்துள்ளது.

உற்சாகம் பறிபோகுமோ...
இப்படி இயற்கை இந்த முறை சதி செய்திருப்பதால், முழுமையான கொண்டாட்ட்தில் ஈடுபட முடியாத நிலைக்கு அமெரிக்கர்கள் தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வழக்கமான உற்சாகத்துடன் நன்றி கூறும் நாளை கொண்டாட ஆரம்பித்துள்ளனர் அமெரிக்கர்கள்.












Click it and Unblock the Notifications