பாகுபலி போல... 2 வயது மகனை கையில் பிடித்து உயிரைக் காத்து நீரில் மூழ்கி இறந்த தாய்!
சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவில் படகு இல்லத்திலிருந்து விழுந்த தனது 2 வயது மகனை மீட்டு அவனைத் தூக்கி் பிடித்தபடி நீரில் தத்தளித்த தாய், சில நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் நீரில் மூழ்கி் பலியானார். அவரது மகன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்தவர் 35 வயதான செல்சி ரஸ்ஸல். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போவல் ஏரியில் உள்ள சுற்றுலாப் படகு இல்லத்திற்கு சென்றிருந்தார் செல்சி. அங்கு படகு இல்லம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவரது 2 வயது மகன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்சி உடனடியாக தண்ணீரில் குதித்தார். தனது மகனை கைகளால் தூக்கிய அவர் தண்ணீருக்குள் தத்தளித்தார். ஆனாலும் அவரது கை மகனை விடவில்லை. தூக்கி உயர்த்திப் பிடித்தபடி 5 நிமிடம் போராடினார். அதற்குள் உறவினர் ஒருவர் ஓடி வந்து குழந்தையைப் பத்திரமாக வாங்கி படகுக்குள் கொண்டு வந்து விட்டார். ஆனால் அதற்குள் செல்சி மயக்கமாகி விட்டார்.
அவரை உடனடியாக மீட்ட மீட்புப் படையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அவர் மீட்ட அவரது 2 வயதுக் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மகனை மீட்கப் போய் உயிரை விட்ட செல்சி ஒரு வழக்கறிஞர் ஆவார். மேலும் மாரத்தான் ஓட்டக்காரரும் ஆவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications