யு.எஸ்.: விடாமல் அழுத பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய்
நியூயார்க்: அமெரிக்காவில் தொடர்ந்து அழுத பச்சிளம் குழந்தையை அதன் தாய் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்டர் கவுன்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி(22). அவருக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்துள்ளது.

சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தை தனது நெஞ்சோடு இறுக்கி அணைத்து மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்தார். மறுநாள் காலை இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் மூக்கு மற்றும் வாயைச் சுற்றி காயமாக இருந்தது என்று போலீஸ் அதிகாரி கிறிஸ் பிரவுன் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேரியை கைது செய்தனர்.
எதிர்பாராவிதமாக குழந்தையை கொலை செய்ததாகவும், தனது மகனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேரி போலீசாரிடம் தெரிவித்தார். எத்தனையோ பேர் குழந்தை இல்லாமல் ஏங்கும்போது மேரி இப்படி செய்துவிட்டாரே என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications