விமானத்தை தவற விட்ட பெண்ணுக்கு.. கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்.. சூப்பர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ப்ளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானத்தை தவற விட்ட பெண், சூப்பர் மார்க்கெட்டில் நேரத்தை செலவிட்ட போது லாட்டரி சீட்டு வாங்கினார். இதில் அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 44 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

யார் யாருக்கோ எப்படியோ அதிர்ஷ்டம் அடித்ததாக கேள்வி பட்டிருப்போம். சிலருக்கு லாட்டரியில் அடிக்கும். லாட்டரியால் கோடீஸ்வரர்கள் ஆனவர்களை விட நடுத்தெருவில் நின்றவர்கள் தான்.

லாட்டரியை நம்பி, வேலைக்கு போகாமல், அதிர்ஷ்டம் அடிக்கும் என்று வாழ்க்கையை தொலைத்த பல குடும்பங்கள் அரசு போட்ட சட்டத்தால் அதில் இருந்து மீண்டுவிட்டன.இதை ஏன் சொல்கிறேன் என்றால், அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு லாட்டரி சீட்டில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதேபோல் நமக்கு அதிர்ஷ்டம் அடித்துவிடும் என்று அதன் மேல் மோகம் கொள்ளக்கூடாது என்பதற்காக சொல்கிறேன்.

கடைசி நேரம்

கடைசி நேரம்

சரி விஷயத்துக்கு வருவோம். புளோரிடா லாட்டரி செய்தி வெளியீட்டின் படி, ப்ளோரிடா மாகாணத்தின் மிசோரி, கன்சாஸ் சிட்டியைச் சேர்ந்த ஏஞ்சலா கேரவெல்லா (வயது 51) . இவர் செல்ல வேண்டிய விமானம் திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

திடீர் விருப்பம்

திடீர் விருப்பம்

இதனால் கேரவெல்லா அடுத்த விமானம் வரும் வரை அந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்று எதாவது வாங்குவோம் எனறு நினைத்துள்ளார். அப்படியே அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க விரும்பினார்.

7 கோடி பரிசு

7 கோடி பரிசு

அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 44 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரவெல்லா தனது வெற்றிச் சீட்டை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்தார் . விமானத்தை தவறவிட்டவருக்கு கோடிகளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, விமானத்தை தவறவிட்ட பிறகு எதார்த்தமாக நேரத்தை கடத்துவதற்காக சூப்பர் மார்க்கெட் என்று லாட்டரி டிக்கெட் வாங்கினேன். அதற்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று நெகிழ்ந்தார்.

உற்சாகம்

உற்சாகம்

இதனிடையே குறிப்பிட்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பெண்ணுக்கு vல்லாம் போக 5,88,53,025 ரூபாய் பரிசு கிடைக்கும். அதை விற்றதற்காக கடைக்கு $ 2,000 போனஸ் கமிஷன் கிடைக்குமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1,48,995 ரூபாய் கிடைக்கும். காரவெல்லா வென்ற லாட்டரி சீட்டு பரிசு கூப்பன் 2020 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்றும் $ 1 மில்லியன் மற்றும் $ 948 மில்லியனுக்கும் அதிகமான பணப் பரிசுகளை கொண்டுள்ள பரிசு கூப்பன்களுடன் லாட்டரி விற்கப்படுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே பரிசு வென்ற பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+