பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதல்.. ஈரானின் மிக முக்கிய ராணுவ தலைவர் பலி.. ஷாக்கிங்!
Recommended Video
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் மற்றும் ஈராக் இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் பல தற்போது அங்கு பாக்தாத்தில் போர் செய்ய தயார் ஆகி வருகிறது.
ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் ஏற்கனவே அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் நிலை
இந்த ஈரான் படைகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் தலைவர்கள்தான் இப்படி குறி வைக்கப்பட்டு வருகிறது.

இன்று
இந்த நிலையில் இன்று அதிகாலை அமெரிக்க ராணுவ படை இரண்டு டிரோன் விமானங்கள் மூலம் ஈராக்கில் தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே சென்ற இரண்டு வாகனங்களை தாக்கி அளித்தது. இதில் மொத்தம் 9 பேர் பலியானார்கள்.

ஈரான் படை
இந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர்தான் ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார்.

மோசம்
அதேபோல் மிக முக்கியமான ஈரான் விருந்தாளிகள் சிலரும், மூத்த தலைவர்களும் இதில் கொலை செய்யப்பட்டுள்ளனராம். இதனால் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஈரானிலும்,ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு தற்போது அமெரிக்க ராணுவ படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறது.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'!












Click it and Unblock the Notifications