அமெரிக்காவுல லிட்டர் பால் ₹450? அண்ணே, அப்படியே 10 லிட்டர் பார்சல்! பீகார் பால்காரர் பிசினஸ் ஸ்கெட்ச்
வாஷிங்டன்: சோஷியல் மீடியாவில் எப்போதுமே எத்தனையோ வீடியோக்கள் வைரலாவது வழக்கம் தான். ஆனால், ஒரு சில வீடியோக்கள் நம்மை அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும். அப்படி ஒரு செம்ம சுவாரசியமான வீடியோ தான் இப்போது இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை பயங்கரமாக கவர்ந்து இழுத்து வருகிறது. அமெரிக்காவுல இருக்குற பாலின் விலையைக் கேட்டு நம்ம ஊரு பால்காரர் ஒருவர் கொடுத்த ரியாக்ஷன் தான் இப்போதைய டாப் ட்ரெண்டிங்..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் "சாய் காய்" என்ற பெயரில் டீ கடை வைத்திருக்கிறார் பிரபாகர் பிரசாத். இந்த கடை எப்போதுமே பயங்கர பிஸியாக இருக்குமாம்.

இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு, அதுவும் தன்னுடைய சொந்த ஊரான பீகாருக்கு ட்ரிப் அடித்துள்ளார். அங்கே உள்ளூர் பால்காரரிடம் கேஷூவலாக பேசிக்கொண்டிருந்தாராம்..
அப்போது, கலிபோர்னியாவில் ஒரு லிட்டர் பாலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய் என்று பிரசாத் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் அந்த பால்காரருக்கு தூக்கிவாரிப்போட்டது. "என்னது... ஒரு லிட்டர் பால் 450 ரூபாயா!" என்று கேட்டு அப்படியே ஷாக் ஆகி நின்றுவிட்டாராம்.
ட்விஸ்ட் இதோடு முடியவில்லை.. அடுத்ததாக பிரசாத், "அங்கே ஒரு கப் டீயோட விலை 10 டாலர், அதாவது நம்ம ஊரு காசுக்கு 900 ரூபாய்" என்று சொன்னதும் பால்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை... உடனே பால்காரர், சடாரென ஒரு மாஸ் பிளான் போட்டார். "அண்ணே... அப்போ நம்ம ஊரு பாலை ஏன் அமெரிக்காவுக்கு எக்ஸ்போர்ட் பண்ணக்கூடாது? சூப்பரா லாபம் பார்க்கலாமே!" என்று பிரசாத்திடம் ஐடியா கேட்க ஆரம்பித்துவிட்டார்.
அத்தோடு நிறுத்தாமல், "பீகாரிலிருந்து அமெரிக்காவுக்கு போகும்போது பால் கெட்டுப்போகாம இருக்க, நல்லா பெரிய ஏசி பெட்டி இருக்குற வண்டியில வச்சு அனுப்பலாம்ணே" என்று பிசினஸ் மேக்னட் ரேஞ்சுக்கு அடுத்தடுத்து ஐடியாக்களாக அள்ளி வீச ஆரம்பித்தார். இதைப் பார்த்த பிரசாத்துக்கே ஒரு நிமிடம் தலை சுற்றிவிட்டதாம்.
இதற்கு பிறகுதான், அமெரிக்காவில் வருமானம் கொட்டினாலும், அதற்கு ஏத்த மாதிரி அங்கே வாழ்க்கை இல்லை.. ஏகப்பட்ட சவால்கள் மற்றும் மன அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் என்று பிரசாத் எதார்த்தத்தை அவருக்குப் புரிய வைத்துள்ளார்.
இவர்கள் 2 பேரும் பேசிய இந்த செம்ம கியூட்டான உரையாடல் வீடியோ தான் இப்போது இணையத்தில் செம வைரலாகி கொண்டிருக்கிறது.. பால்காரரின் இந்த அசாத்தியமான பிசினஸ் மூளையைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும், "அதிர்ச்சியாகி உட்காராமல், அடுத்த நொடியே அமெரிக்காவுக்கு பிசினஸ் பண்ண பிளான் போடுறாரே... மனுஷன் வேற லெவல்!" என்று பாராட்டி தள்ளி வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications