நாம் இருவர்.. நமக்கு மீண்டும் ஒரு "இருவர்"!
லின்டன், உடா, அமெரிக்கா: அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டையர்களான கெர்ரி பங்கர் மற்றும் கெல்லி வால் ஆகிய இருவரும் கர்ப்பமாகியுள்ளனர். இது அவர்களுக்கு 2வது கர்ப்பமாகும். இதில் என்ன செய்தி என்று கேட்கலாம். இருவரும் ஏற்கனவே தலா ஒரு இரட்டையரைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு இரட்டையரே பிறக்கப் போகிறார்களாம். இதுதான் விசேஷமே.
இந்த இரு சகோதரிகளும் ஏற்கனவே தலா ஒரு இரட்டையரைப் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு இரட்டையரைப் பெறத் தயாராகி வருகின்றனராம்.
இரண்டு முறை இரட்டையரைப் பெறுவது ரொம்ப வித்தியாசமானது, ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று வால் கூறியுள்ளார்.

செயற்கைக் கருவூட்டல்...
லிண்டன் நகரைச் சேர்ந்த இந்த இருவரும் செயற்கைக் கருவூட்டல் முறையில்தான் முதல் இரட்டையரைப் பெற்றனராம். இயல்பாக கர்ப்பம் தரிப்பதில் பெரும் சிரமம் ஏற்படவே சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றனர்.
இரட்டைக் குழந்தைகள்...
இந்த நிலையில் மீண்டும் இருவரும் சோதனைக் குழாய் மூலம் அடுத்தக் குழந்தைக்கு முயற்சித்தபோது இருவருக்குமே அதுவும் இரட்டைக் குழந்தையாகியுள்ளதாம். இன்னும் 2 வாரங்களில் இவர்களுக்குப் பிரசவம் நடைபெறும் என தேதி குறிப்பிட்டுள்ளனராம் டாக்டர்கள்.
நண்பர்கள்...
இருவரிடமும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரின் கணவர்களும் திருமணத்திற்கு முன்பே மிக நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
ஒரே டேஸ்ட்..
இரு பெண்களுமே ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகளாக உள்ளனர். இருவருக்குமே ஒரே மாதிரியான டேஸ்ட் உள்ளது. வாழ்க்கை முறையும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி வைத்துள்ளனர்.
ஏற்கனவே இரட்டையர்கள்....
பங்கருக்கு கோல், ஹாலி என 3 வயதான இரு குழந்தைகள் உள்ளனர். வால்க்கு மாடிசன், மெக்கெல் என 4 வயதில் குழந்தைகள் உள்ளனர். அந்த நால்வரும் நல்ல தோழமையுடன் பழகி வருகின்றனராம்.
அம்மாக்களைப் போலவே...
தங்களது தாயாரைப் போலவே இந்த நால்வரும் ஒற்றுமையுடன், அனுசரனையுடன், அன்பாக, நட்பாக பழகி வருகிறார்கள் என்று வால் பெருமையுடன் கூறுகிறார்.
குழப்பம்...
பங்கரும், வாலும் சேர்ந்து போனால் பார்ப்பவர்களுக்கு யார் பங்கர், யார் வால் என்பதில் குழப்பம் ஏற்படுமாம். குறிப்பாக அவர்களது பள்ளி முதல்வர்தான் ரொம்பக் குழம்பிப் போய் விடுவாராம். மேலும் மாணவர்களுக்கும் கூட இன்னும் குழப்பம் தீரந்தபாடில்லையாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications