டெல்டா பிளஸ் வேக்சின் மட்டும் போதாது.. இது இருந்தால்தான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.. WHO தகவல்

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: தடுப்பூசி மற்றும் முறையாக மாஸ்க் அணிவதன் மூலம் டெல்டா பிளஸ் கொரோனாவை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளும் தற்போது கொரோனாவை சமாளிப்பதிலேயே பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தின.

இருந்தாலும்கூட உருமாறிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பெரிய சிக்கலையே ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாகப் புதிதாகக் கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் கொரோனா.

டெல்டா பிளஸ்

டெல்டா பிளஸ்

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா தற்போது மேலும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனாவாக தோன்றியுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனாவால் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வேக்சின் மட்டும் போதாது

வேக்சின் மட்டும் போதாது

மேலும், இந்த டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக வேக்சின்கள் பலன் அளிக்குமா , இதனை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இது பற்றிப் பேசிய உலக சுகாதார அமைப்பின் ரஷ்யா பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக், "டெல்டா வகை கொரோனாக்களுக்கு வேக்சின்கள் மட்டும் போதாது. நாம் இந்த வகை கொரோனாவைக் கட்டுப்படுத்த உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Recommended Video

    Delta Variant 3ஆவது அலையை தீவிரப்படுத்துமா?? | Mr. Vijayanand interview | Oneindia Tamil
    வேக்சின் + மாஸ்க்

    வேக்சின் + மாஸ்க்

    இல்லையென்றால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. வேக்சின் + மாஸ்க் என்ற அணுகுமுறையே டெல்டா பிளஸ் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும். இதில் வேக்சின்கள் மிக முக்கியமானது. அது நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் மேலும், தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நிறுத்தும். அதேநேரம் தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்" என்றார்.

    உருமாறிய கொரோனா

    உருமாறிய கொரோனா

    டெல்டா வகை கொரோனாவின் வெளிப்புறத்தில் இருக்கும் புரதம் உருமாற்றமடைந்து டெல்டா பிளஸ் கொரோனாவாக தோன்றியுள்ளது. இதனை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவித்துள்ளது. இந்த வகை கொரோனா இம்யூன் எஸ்கேப் ஆற்றல் கொண்டது. அதாவது ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்கள் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகளில் இருந்து இது தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+