டென்மார்க்கை திட்டி தீர்த்த அமெரிக்க துணை அதிபர்! கனிம கொள்ளை கண்ணை மறைக்குதோ!
நூக்: கிரீன்லாந்து பயணத்தின்போது டென்மார்க்கை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் திட்டி தீர்த்திருக்கிறார். டென்மார்க் வசம் இருக்கும் கிரீன்லாந்தில் ஏராளமான கனிம வளம் இருக்கிறது. எனவே கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், கிரீன்லாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், வேன்ஸ் கோபமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நேற்று கிரீன்லாந்து சென்றிருந்த வேன்ஸ், அங்கு அமெரிக்க ராணுவ தளத்தை பார்வையிட்டிருக்கிறார். ஆனால் அவரது பயணம் கலாச்சார ரீதியாக இருந்தது. அதாவது கிரீன்லாந்து மக்களை பார்த்து, அங்கு நடக்கும் முக்கிய விழாவில் பங்கேற்பதாக இருந்தது. எனினும் அவரது வருகைக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பயணம் மாற்றப்பட்டிருக்கிறது.

வேன்ஸ் பேசியது என்ன?:
"ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் கிரீன்லாந்து இலக்காக இருக்கிறது. எனவே இந்த தீவை டென்மார்க்கிடமிருந்து பிரித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். 300 ஆண்டு ஒப்பந்தத்தில் கிரீன்லாந்து டென்மார்க் வசம் இருக்கிறது. இருப்பினும் இந்த தீவுக்கு டென்மார்க் போதுமான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கின்றன. ஆகவேதான் நாங்கள் இந்த தீவை கேட்கிறோம். நிச்சயம் தீவை கைப்பற்றுவோம். அது படை பலத்தால் நடக்காது. மாறாக பேச்சுவார்த்தையின் மூலம் சாத்தியமாகும்" இதுதான் வேன்ஸ் பேசியது.
இவரது பேச்சுக்கு கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏன் கிரீன்லாந்து மீது அமெரிக்காவுக்கு இவ்வளவு அக்கறை? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்நாட்டில் உள்ள கனிம வளத்தை கொள்ளையடிக்கவே அமெரிக்கா திட்டமிடுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் இதற்கு பதில் அளித்துள்ளனர்.
டிரம்ப் எனும் ரியல் எஸ்டேட் முதலை:
கிரீன்லாந்தை பற்றி அமெரிக்கா பேசுவது இது முதல்முறை கிடையாது. ஆனால், பைடன் ஆட்சிக்காலத்தில் இப்படியான பேச்சுகள் எதுவும் எழவில்லை. அதற்கு முன்னர் (2019) அதிபராக இருந்த டிரம்ப் கிரீன்லாந்தை விலை கொடுத்து வாங்க போவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் மீண்டும் அதிபராக ஆகியிருக்கும் நிலையில் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார். டிரம்பின் கருத்துக்கு ஆதரவு இருக்கிறதா? எதிர்ப்பு இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்யவே வேன்ஸ் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
விரிவான பயண திட்டம்:
முதலில் வேன்ஸின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா வேன்ஸ் மற்றும் அவரது குழந்தைகள் கிரீன்லாந்தில் நடக்கும் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் (Michael Waltz), எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் மைக் லீ (Mike Lee) ஆகியோரும் பயணத்தில் இணைந்தனர்.
வேன்ஸுக்கு கடும் எதிர்ப்பு:
இவர்களின் வருகைக்கு கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை சந்திக்க வந்தால் நாங்கள் முதுகை காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கண்டனம் முழங்கினர். இதனையடுத்து கிரீன்லாந்தின் தலைநகரான ந்யூக் (Nuuk) நகரத்திற்கு 1,500 கிமீ தொலைவில் அமைந்துள்ள அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புத் தளத்தை விசிட் செய்த வேன்ஸ், கொஞ்ச நேரம் இருந்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
கிரீன்லாந்தில் என்ன இருக்கிறது?:
1. அயர்ன் ஓர் (Iron Ore)
2. அலுமினியம் மற்றும் பெக்சைட் (Aluminium & Bauxite)
3. அரிய வகை கனிமங்கள் - இந்த பட்டியலில் 17 வகையான கனிமங்கள் இருக்கின்றன
4. யுரேனியம் (Uranium)
5. தங்கம் (Gold)
6. டைட்டேனியம் (Titanium) & வெண்கலம் (Zinc, Lead, Copper)
7. நீலப்பச்சை கனிமங்கள் (Nickel, Cobalt, Platinum)
8. வைரங்கள் (Diamonds)
9. எரிசக்தி வளங்கள் (Oil & Gas Reserves)
ஆகியவை கிரீன்லாந்தில் அதிக அளவில் இருக்கிறது. இதை வெட்டி வெளியில் எடுத்தால் மொத்த அமெரிக்காவுமே ஒரு நூறு ஆண்டுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு காசு பார்க்கலாம். இதை வைத்து சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவே அமெரிக்கா கிரீன்லாந்து மேல் கண்ணாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications