துப்பாக்கி சத்தம்.. அதன்பின் வந்த புகை.. 2 முறை சுடப்பட்ட ஜப்பான் ஷின்சோ அபே.. வெளியான பரபர வீடியோ!
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 41 வயது நபர் ஒருவர் ஷின்சோ அபேவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார். நாரா என்ற பகுதியில் மக்கள் முன்னிலையில் பேசிக்கொண்டு இருக்கும் போது யமகாமி என்ற 41 வயது நபரால் ஷின்சோ அபே சுடப்பட்டார்.
அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அபேவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு பல்ஸ் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
|
வீடியோ
இந்த நிலையில் ஷின்சோ அபேவை யமகாமி என்ற அந்த நபர் துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஷின்சோ அபே பேசிக்கொண்டு இருக்கும் அவருக்கு பின் பக்கத்தில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதலில் துப்பாக்கி சுடும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. ஷின்சோ அபேவிற்கு பின் பக்கத்தில் சில மீட்டர்கள் தூரத்தில் துப்பாக்கி சுட்ட புகை இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
|
இரண்டு முறை
சில நொடிகளில் இரண்டாவது முறை சுடும் சத்தம் கேட்கிறது. இதையடுத்து அங்கு புகை அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் ஷின்சோ அபே சுருண்டு விழுந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருக்கின்றன. இன்னும் சில ஜப்பான் செய்தி நிறுவன வீடியோக்களில் ஷின்சோ அபே பேசிக்கொண்டே இருக்கும் போதே சுடப்படும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
|
என்ன நடந்தது
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் அவரின் பாதுகாவலர்கள் ஓடி வந்து ஷின்சோ அபேவை தூக்குகிறார்கள். கருப்பு கோட் அணிந்த வேறு சில பாதுகாவலர்கள்.. ஷின்சோ அபேவை சுட்டவரை ஓடி சென்று பிடித்துள்ளனர். இந்த காட்சிகளும் வீடியோவாக பதிவாகி உள்ளது. யமகாகி என்ற அந்த நபர் சாம்பல் நிற உடை அணிந்து உள்ளார். இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன. Credit NHK news.
|
ஹெலிகாப்டர்
இன்னொரு வீடியோவில் ஷின்சோ அபே ஆம்புலன்சில் இருந்து ஹெலிகாப்டருக்கு மாற்றப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலே நீல நிற துணி போர்த்தி ஷின்சோ அபேவை ஆம்புலன்சில் இருந்து ஹெலிகாப்டருக்கு மாற்றுகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் அவரின் வாகனத்தை மாற்றி உள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. credit CBSNews.












Click it and Unblock the Notifications