வெனிசுலாவில் துப்பாக்கி ஏந்திய மர்மகும்பல் தாக்குதல்.... அபார்ட்மென்டில் இருந்த 11 பேர் பலி
கராகஸ்: வெனிசுலா நாட்டில் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து 11 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டின் டிரிஜுல்லா மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. பின்னர் அங்குள்ள வீடுகளில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்த அந்த மர்ம கும்பல், அவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 13 வயதிலிருந்து 19 வயதிற்குட்பட்டவர்கள் 3 பேர் மற்றும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது இருச்சக்கர வாகனங்கள் மற்றும் காரில் ஏறி தப்பிச் சென்றது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பிச் சென்ற மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் தெற்கு வெனிசூலாவில், 17 சுங்க பணியாளர்கள் இதே பாணியில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications