மீண்டும் தலை காட்டிய "பிங்க்" டால்பின்... கர்ப்பமாக இருக்கலாம் என தகவல்!
நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா பகுதி நதியில் மீண்டும் வெளியே தலை காட்டியுள்ளது பிங்க் நிற டால்பின். உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே உள்ளதாக நம்பப்படுகிறது. இது இப்போது கர்ப்பமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ளது கால்காசியு பாரீஸ். இங்குள்ள நதி ஒன்றில் கடந்த 2007ம் ஆண்டு பிங்க் நிறத்தில் டால்பின் ஒன்று வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டது. மற்ற டால்பின்களில் இருந்து நிறத்தில் வேறுபட்டு இருந்த இந்த பிங்க் டால்பினுக்கு ‘பிங்கி' எனப் பெயரிடப் பட்டது.

உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவ்வப்போது தனது தாய் டால்பினுடன் நீருக்கு வெளியே தலை காட்டிச் செல்லும் இந்த பிங்கி.
இந்நிலையில், தற்போது மீண்டும் பிங்கியின் தரிசனம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக முதன்முறையாக பிங்கியை படமெடுத்து வெளி உலகத்திற்கு காட்டிய கால்காசியு சார்ட்டர் சர்வீஸ் கேப்டன் எரிக் ரூ கூறுகையில், "கோடைகாலத்தில் பிங்கி அடிக்கடி நீருக்கு வெளியில் வந்து விளையாடுவதை நான் பார்த்துள்ளேன். முன்பெல்லாம் பிங்கி அது தன் தாயாருடன் நீரில் விளையாடும். ஆனால், சமீபகாலமாக அது தனியாகவும், மற்ற டால்பின்களுடனும் சேர்ந்து நீரில் விளையாடுவதைக் காண முடிகிறது. மிகவும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் பிங்கி காணப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிங்கியின் இந்த உற்சாகத்திற்குக் காரணம் அது கர்ப்பமாக இருக்கும் என எரிக் சந்தேகம் தெரிவித்துள்ளார். அவ்வாறு பிங்கி கர்ப்பமாக இருப்பது உறுதியானால், அதன் குட்டி என்ன கலரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications