For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து போலீசாருக்கு ஆணுறை பலூன்கள் அளித்த நடிகர், பத்திரிக்கையாளர்: தீயாக பரவிய வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

கெய்ரோ: ஒரு பத்திரிக்கையாளரும், நடிகரும் எகிப்து போலீசாருக்கு ஆணுறை பலூன்களை அளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தீயாக பரவியுள்ளது.

எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் அரசை கவிழ்த்ததன் 5வது ஆண்டு நிறைவு மற்றும் தேசிய போலீஸ் தினத்தையொட்டி தஹ்ரிர் ஸ்கொயரில் நேற்று முன்தினம் வீடியோ ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் அகமது மாலிக் மற்றும் பத்திரிக்கையாளர் ஷாதி ஹுசைன் ஆகியோர் எகிப்து கொடியை அசைத்தும், தரையை முத்தமிட்டும், எகிப்து வாழ்க என்றும் கோஷமிடுகிறார்கள்.

பின்னர் அவர்கள் இருவரும் ஆணுறை பலூன்களை போலீசாரிடம் அளிக்கிறார்கள். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியான வேகத்தில் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலிக்கும், ஹுசைனும் போலீசாரை அவமதித்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மாலிக் தனது செயலுக்காக போலீசாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

English summary
A video showing an actor and a reporter handing condom balloons to Egyptian policemen has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X