கொரோனா பாதித்த தம்பதி.. குளுகோஸ் பாட்டிலுடன் மனைவிக்கு உணவு.. நெகிழ்ச்சியான காதல்.. வைரல் வீடியோ
Recommended Video
பெய்ஜிங்: சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தன் மனைவிக்கு அதே நோயால் பாதிக்கப்பட்டுள்ள 87 வயது கணவர் உணவு, தண்ணீரை அவ்வப்போது வழங்கி வரும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.
இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1500 பேர் பலியாகிவிட்டனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
|
முதிர்ந்த தம்பதி
நோயின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சீன நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் ட்விட்டர் பக்கத்தில் கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த தம்பதியின் வீடியோ வெளியாகியுள்ளது.

மனைவி
அதில் 87 வயதான கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வருகிறார். அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு அவ்வப்போது உணவு, தண்ணீரை ஊட்டுகிறார். இருவருக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கும் போதும் வயதான காலத்தில் மனைவிக்கு உதவும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரார்த்தனை
தனக்கு கை நரம்பில் ஏற்பட்ட குளுகோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி வரும் முதியவர் தன் மனைவி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து அவரை பார்க்க வருகிறார். இந்த காலத்தில் வயது இருந்தும் நல்ல ஆரோக்கியம் இருந்தாலும் ஏதோ சிறிய காய்ச்சல் என்றாலும் பாசமாக கவனித்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத சூழலே தற்போது நிலவுகிறது.

பாராட்டு
ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல் தன் மனைவிக்கு உணவை ஊட்டுகிறார். இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் போது இவர்களது காதல் தான் உண்மையான காதல். நோய்வாய் பட்ட நேரத்திலும் கணவன் மனைவியை தாங்குவதும், மனைவி கணவனை தாங்குவதும்தான் உண்மையான பாசம். இந்த முதியவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிவதோடு இருவரும் நலம் பெற பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.












Click it and Unblock the Notifications