உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை.. தந்தை பாடும் பாடல்: பரவும் உருக்கமான வீடியோ
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தை இறந்தது. அது இறக்கும் தருவாயில் அதற்கு தந்தை பாடிய பாடல் அடங்கிய வீடியோ பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு கடந்த 8ம் தேதி குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24 வாரங்களே இருந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது.
ஆனால் குழந்தை கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. முன்னதாக குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது கிறிஸ் அதன் அருகில் அமர்ந்து கிட்டார் வாசித்துக் கொண்டே மெல்லிய குரலில் பாட்டுபாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.
வீடியோவில் குழந்தையின் முகம் தெரியவில்லை. துணியால் குழந்தையின் உடலை சுற்றி வைத்து ஆங்காங்கே டியூப்கள் இணைக்கப்பட்டதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் கண்கலங்கினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications