திமிங்கலம் வெடிப்பதை எங்கேயோவது பார்த்திருக்கிறீர்களா?... இங்க வந்து பாருங்க!
பாரோ தீவுகள், வடக்கு அட்லான்டிக்: இறந்து போன திமிங்கிலத்தின் எலும்புக் கூட்டை பாதுகாப்பதற்காக அதை அறுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அது எரிமலை போல வெடித்துச் சிதறியதால் அதை அறுத்துக் கொண்டிருந்த உயிரியல் துறை நிபுணர் பெரும் பீதியடைந்து போனார்.
நல்ல வேளையாக அந்த நிபுணருக்கு ஒன்றும் ஆகவில்லை. திமிங்கலத்தின் வயிற்றில் நிரம்பியிருந்த வாயுவின் அழுத்தத்தால்தான் திமிங்கலம் வெடித்துச் சிதறி விட்டதாம்.
வடக்கு அட்லான்டிக் கடலில் உள்ள பாரோ தீவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சியைப் பார்த்தால் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

பாரோ தீவில்
வடக்கு அட்லான்டிக்கில் உள்ளது பாரோ தீவு. இங்கு கிட்டத்தட்ட ஸ்பெர்ம் வேல் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கலமாகும். பாரோ தீவில் உள்ள ஒரு குறுகலான வாய்க்கால் போன்ற பகுதியில் இரண்டு திமிங்கலங்கள் சிக்கிக் கொண்டு இறந்து போய் விட்டன.

எலும்புக் கூட்டைப் பாதுகாக்க முயற்சி
இதையடுத்து அந்தத் தீவில் வசிப்போர் அவற்றின் எலும்புக்கூட்டை எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்க முடிவு செய்தனர்.

வந்தார் ஜார்னி மிக்கல்சே
இதையடுத்து உயிரியல் நிபுணரான ஜார்னி மிக்கல்சேவிடம், திமிங்கலத்தை அறுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

டமாரென வெடித்த திமிங்கலம்
ஜார்னியும் திமிங்கலத்தை அறுக்க ஆரம்பித்தார். அப்போது திடீரென திமிங்கலம் பெருத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜார்னி அங்கிருந்து வேகமாக அகன்று விட்டார்.

ஏன் வெடித்தது...
திமிங்கலத்தின் வயிற்றில் நிரம்பியிருந்த வாயுவின் அழுத்தம்தான் அது வெடித்துச் சிதறக் காரணம் என்று கூறியுள்ளார் ஜார்னி.

எரிமலை போல
திமிங்கலம் வெடித்துச் சிதறியது, ஏதோ எரிமலை வெடித்தது போல இருந்ததாக அதை வேடிக்கை பார்த்தவர்கள் கூறினர்.

பரபரப்பாக பரவும் வீடியோ
தற்போது திமிங்கலம் வெடிக்கும் இந்த வீடியோ காட்சி யூடியூப் மூலம் வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை 3 லட்சம் ஹிட் அடித்துள்ளது இந்த வீடியோ காட்சி.
பி.கு. சாப்பாட்டுக்கு முன்பு இதைப் பார்க்காதீர்கள்.. பிறகு சாப்பிடவே முடியாது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications