தவறான இடத்தில் தரையிறங்கிய வியட்நாம் விமானம்... கடத்தப்பட்டதாக பயணிகள் அதிர்ச்சி!
ஹனாய்: வியட்நாம் நாட்டில் உள்ள சுற்றுலா தலத்துக்கு சென்ற வியட்ஜெட் விமானம் ஒன்று, தவறுதலாக வேறொரு விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கடத்தப்பட்டதோ என்ற குழப்பம் அதில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் உண்டானது.
கடந்த 2011-ல் தொடங்கப்பட்டது இந்த வியட்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம். இது வியட்நாமில் உள்ள 11 முக்கிய நகரங்கள் மற்றும் சிங்கப்பூர், பாங்காங் ஆகிய நகரங்களுக்கு குறைந்த கட்டண விமான சேவையை செய்து வருகிறது.
இந்நிலையில், விஜே 8575 என்ற வியட்ஜெட் விமானம் 200 பயணிகளுடன், அந்நாட்டில் உள்ள டா லட் என்ற சுற்றுலா தளத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
தவறான விமான நிலையம்...
ஆனால், பைலட் உட்பட விமான ஊழியர்களின் தவறால், அந்த விமானம் டா லட்டிற்குப் பதிலாக அங்கிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேன் ரன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
குழப்பம்...
விமானம் வேறு விமான நிலையத்தில் தரையிறங்குவதைக் கேள்விப்பட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானம் கடத்தப் பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என அவர்கள் குழப்பமடைந்தனர்.
ஊழியர்களின் தவறு தான்...
பின்னர், நடந்த தவறுக்கு விமானத்தின் பைலட் மற்றும் பிற ஊழியர்களும், தரையிறங்கிய விமான நிலைய ஊழியர்களும் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டது. அவர்கள் நடைமுறைகளை சரிவர கடைபிடிக்காததே இந்த குழப்பத்திற்குக் காரணம் என வியட்நாம் விமான நிலைய முகமையின் இணையதளம் கூறியுள்ளது.
பணியிடை நீக்கம்...
மேலும், அதில் இச்சம்பவத்துக்கு காரணமான விமானி உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், விமான நிலைய ஊழியர்கள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் நடனம்...
ந்ஹா ட்ரங் என்ற நகருக்கு முதல் விமான சேவையை அறிமுகப்படுத்திய இந்த விமான நிறுவனம், பயணக்களைப்பு தெரியாவண்ணம் இருக்க பறக்கும் விமானத்தில் அரைகுறை ஆடையணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications