For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வியட்நாமில் 2 பைலட்டுக்களுடன் போர் விமானம் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சியின் போது 2 பைலட்டுக்களுடன் மாயமாகியுள்ளது. மாயமான விமானத்தினை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரஷ்யாவில் தயாரான சுகோய் எம்.கே.-2 ரக ஜெட் விமானம். இந்த விமான கடைசியாக செவ்வாய்க்கிழமை காலை வரை தொடர்பில் இருந்தது. விமானத்தில் இரண்டு பைலட்டுக்கள் இருந்தனர்.

Vietnamese fighter jet was missing on Tuesday

இது தொடர்பாக வியட்நாம் அரசின் துவோய் டிரி செய்திதாளில், "லீ வேன் குவோங் என்ற மீனவர் மஞ்சள் நதியை ஒட்டியுள்ள மேட் தீவுப் பகுதிக்கு அருகே இந்த விமானத்தை பார்த்ததாக கூறியுள்ளார். தீவு அருகே விமானத்தின் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாயமானத்தை தேடும் பணியில் 4 விமானங்களும், 12க்கும் மேற்பட்ட கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ராணுவ விமான விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A Russian-made Vietnamese fighter jet was missing on Tuesday after disappearing off the radar during a training flight along the central part of the country's South China Sea coastline, a military official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X