For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்படியே வியந்து பார்த்த இளவரசர்.. "இனி ஆக்‌ஷன்தான்".. உலக தலைவர்களை அதிர வைத்த வினிஷா உமாசங்கர்

கிளாஸ்கோ பருவநிலை மாற்றம் மாநாட்டில் வினிஷா உமாசங்கர் உரையாற்றினார்

Google Oneindia Tamil News

கிளாஸ்கோ: "வெற்று வாக்குறுதிகளை தந்து, அவைகளை நிறைவேற்றாமல் போன தலைவர்கள் மீது என்னுடைய தலைமுறையினரில் ஏராளமானோர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.. அதனால் செயல்பாட்டில் தலைவர்கள் இறங்க வேண்டும் என்று தமிழக மாணவி கிளாஸ்கோ மாநாட்டில் உரை நிகழ்த்தியது உலக மக்களை ஈர்த்து வருகிறது.

பருவநிலை மாற்றம் மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.. இதில் நம் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த பருவநிலை மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவி வினிஷா உமா சங்கர் என்பவரும் பங்கேற்றார்... இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்..

தடுமாறிய சார்லஸ்.. பருவநிலை மாற்ற மாநாட்டு மேடை ஏறும்போது சறுக்கிய படிக்கட்டுதடுமாறிய சார்லஸ்.. பருவநிலை மாற்ற மாநாட்டு மேடை ஏறும்போது சறுக்கிய படிக்கட்டு

 இஸ்திரி வண்டி

இஸ்திரி வண்டி

14 வயது ஆகிறது.. 9-ம் வகுப்பு படிக்கிறார்.. சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை இவர் உருவாக்கி இருக்கிறார்.. இதன் சிறப்பு என்வென்றால், கரியின் பயன்பாடு இதில் கட்டுப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது... ரூ.40 ஆயிரம் செலவில் இந்த இஸ்திரி வண்டியை உருவாக்கி உள்ளார். இந்த அரிய கண்டுபிடிப்புக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகள் வழங்கப்பட்டன.

கண்டுபிடிப்புகள்

கண்டுபிடிப்புகள்

அதேபோல, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கு "எர்த்ஷாட்" என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் இந்த பரிசை உருவாக்க உள்ளார்.. அதற்கு சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இந்த வருடம் இந்த பரிசுக்கு மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர்.. இந்த 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர்...

அதிபர்கள்

அதிபர்கள்

இவரை இந்த மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்த இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார்.. அதன்பேரில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தலைவர்கள் முன்னிலையில் வினிஷாவும் கலந்து கொண்டு பேசினார். வினிஷா பேசியதாவது: "வெற்று பேச்சுதான் இங்கு அதிகமாக உள்ளது.. பேசுவதை நிறுத்திவிட்டு செயல்பாட்டில் இறங்க வேண்டும்.. பழைய விவாதங்களை பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்... ஏனென்றால் புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வை எங்களுக்கு தேவையாக இருக்கிறது..

எதிர்காலம்

எதிர்காலம்

எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன்... எங்களுடன் நீங்கள் துணை நிற்க வேண்டும்.. பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் நீங்கள் கைவிட வேண்டும்.. ஒருவேளை நீங்கள் எங்களுடன் சேராவிட்டாலும், வழி நடத்துவோம்...

அழைப்பு

அழைப்பு

நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் செயல்படுவோம்... நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆனால் தயவு செய்து என்னுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்... நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.. வெற்று வாக்குறுதிகளை தந்து, அவைகளை நிறைவேற்றாமல் போன தலைவர்கள் மீது என்னுடைய தலைமுறையினரில் ஏராளமானோர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர்..

நம்பிக்கை

நம்பிக்கை

இப்படி கோபப்பட எல்லா காரணங்களும் இருந்தாலும், அதற்கு எனக்கு நேரமில்லை... செயல்படவே விரும்புகிறேன். நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி மட்டுமல்ல, இந்த பூமியில் இருந்து வந்த சிறுமியும்கூட.. இதுதான் எனக்கு பெருமை.. நானும் ஒரு மாணவிதான்.. கண்டுபிடிப்பாளரும்கூட.. சுற்றுச்சூழல் ஆர்வலரும்.. தொழில் முனைவோரும்கூட.. மொத்தத்தில் நான் ஒரு ஒரு நம்பிக்கையாளர்" என்றார்.

English summary
Vinisha Umashankar: 14 year old Vinisha Umashankar messege to world leaders in Glasgow climate summit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X