ஈரான் மீது மீண்டும் போர்.. அமெரிக்காவில் நடக்கும் ரகசிய கூட்டம்.. இஸ்ரேல் கொடுத்த முக்கிய தகவல்!
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் அமெரிக்காவுடன் எட்டப்படாத நிலையில், அமெரிக்க நிதியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் நெக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மீண்டும் ஈரான் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்குவதற்கான மிகப்பெரிய திட்டத்தை தீட்டி வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஈரான் ராணுவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியது மூலம் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 110 டாலரை தாண்டி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்தது.

பரபர ரிப்போர்ட்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் அறிக்கையின்படி, ஈரான் மீதான மீண்டும் போர் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த வாரத்திலேயே ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 3 நாடுகள் மத்தியில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, போர் தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதத் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இறங்கியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டு உள்ளனர். இந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் ஈரான் மீது எத்தகைய தாக்குதல் நடத்த வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டங்கள் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என்றாலும், விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி
அமெரிக்கா - ஈரான் மத்தியில் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் போர் முடிவுக்கு வராத நிலையில், அமெரிக்கா அதிபர் சீன பயணத்தை முடித்துக்கொண்டு ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வார இறுதியில் தனது தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார். இவர்களுடன் துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிஃப், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஈரானின் எரிசக்தி நிலையங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராணுவ இலக்குகளைத் தாக்கும் விரிவான திட்டங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பென்டகன் அதிகாரிகள் ஏற்கெனவே ஈரான் போரின் அவசரத் திட்டங்களைத் தயாரித்துள்ளனர்.
டார்கெட் யுரேனியம்
இதேவேளையில் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியில் சிறப்பு படை நடவடிக்கை வாயிலாக ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைப் கைப்பற்றும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகைய நடவடிக்கை அமெரிக்க வீரர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்நாட்டு ஆதரவு குறையும் அபாயமும் உள்ளது.
இந்த முக்கிய ஆப்ரேஷனுக்கு இஸ்ரேல் தான் ஈரான் நாட்டில் இருக்கும் யுரேனியத்தை எப்படி மீட்பது என்பதற்கான முழு தகவலையும் அளித்து வருகிறது.
இந்தச் சூழலில் ஈரான் கடந்த ஒரு மாதத்தில் தனது ஏவுகணைத் தளங்களை வலுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய 33 ஏவுகணைத் தளங்களில் 30 இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இது உலக எண்ணெய் வர்த்தகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
பொருளாதார பாதிப்பு என்ன?
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் ஏற்பட்டால், உலக சந்தையில் எண்ணெய் விலை தடாலடியாக உயரும். ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த நிலையில் ஈரான் மீதான போர் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகள் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பேச்சுகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை. டிரம்ப் நிர்வாகம் ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா - இஸ்ரேல் தயாராகி வருவது தொடர்பான தகவல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications