நீட் முதுநிலை தேர்வு தேதி அறிவிப்பு.. ஆகஸ்ட் 30ல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026ம் ஆண்டுக்கான நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 30ம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 2026ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 30ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும்.

neet exam neet pg

இதற்கான விண்ணப்ப பதிவு ஜுலை (நேற்று) 1ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் ஜுலை 21ம் தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் முடிவுக்கு வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் natboard.edu.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். தேர்வு மையங்களை ஒதுக்கும் நடைமுறை ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கும்.

இந்த முறை First Come First Serve முறையில் தேர்வு மையங்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் இருக்காது. இதனால் முன்கூட்டி விண்ணப்பம் செய்வோருக்கும் குறிப்பிட்ட நகர் அல்லது குறிப்பிட்ட தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை வழங்கப்படாது. விண்ணப்பத்தை 3 மாதத்திற்குள் எடுத்த புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+