Guru Peyarchi 2026: அடிச்சான் பாரு அப்பாயிண்மென்ட் ஆர்டரு.. கடக ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு!
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு கடக ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு வரும் குரு பகவான் உச்சம் பெற்று வலிமையாக அமர்கிறார். சொந்த வீட்டில் ஆட்சியோடு உச்சம் பெற்ற குருவால் நிறைய நன்மையும், கெடுதலும் நடக்கக்கூடும். கடகத்திற்கு 6 மற்றும் 9 ஆம் அதிபதி குரு பகவான். குரு இப்போது உங்கள் ராசியிலேயே அதாவது ஜென்மத்திலேயே இருக்கிறார்.
சொத்துகள் வாங்கும் யோகம்
பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். துணைக்கு நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடக்கும். திருமண யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, பிடித்த விஷயங்களை செய்வது, முதலீடுகளை செய்வது, வசதிகளைப் பெருக்கிக் கொள்வது போன்ற ஏற்றங்கள் உண்டாகும்.
ஆரோக்கியம்
அசாதாரண முன்னேற்றம் பெறுவீர்கள். அப்பா, அம்மா ஆரோக்கியம், உங்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதையில் வருவதற்கான வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தத்தில் மிகுந்த கவனம் தேவை. இரவு நேரத்தில் நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்ப்பது நல்லது. தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும்.
சுபகாரியம்
திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனை, கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். சிறிய பேச்சுவார்த்தை கூட பிரிவைத் தடுக்கும் அனுகூலமான நேரம். குடும்பத்தில் நிறைய நன்மைகள் உண்டாகும். வீட்டில் நிறைய சுப காரியங்கள் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம், நில மாற்றம் உண்டாகும்.
வழிபாடு
புதிய வண்டி, வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கழிவுப் பாதை, இதயம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. ஆலங்குடி குரு பகவானை வழிபாடு செய்து கொள்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications