மரணப் படுக்கையில் தந்தை, மணக்கோலத்தில் மகள்: பார்ப்பவர்களை அழ வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தந்தை மரணப்படுக்கையில் இருக்க மகள் அவர் கண் முன்பு திருமணம் செய்து கொண்டு அவருடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டாக்டர் லிசா வில்சன். அவரது தந்தை டேவிட் ஹாலிபர்டன் வில்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து லிசா தனக்கு நிச்சயமான திருமணத்தை நிச்சயித்த நாளுக்கு முன்பே மருத்துவமனையில் தனது தந்தையின் முன்பு நடத்த முடிவு செய்தார்.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

மருத்துவமனையில் லிசா, ராப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது தந்தையிடம் வந்து அப்பா, நாம் நடனம் ஆடலாமா என்று கேட்டார்.

நடனம்

நடனம்

படுத்தபடுக்கையாக இருக்கும் தன்னால் எழுந்து நடனமாட முடியாது என்று டேவிட் கூற லிசாவோ உங்கள் கையை மட்டும் கொடுங்கள் என்று கூறினார்.

இசை

இசை

ஒருவர் செல்போனில் பாடல் இசைக்க லிசா தனது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு நடனமாட டேவிட் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

உறவினர்கள்

உறவினர்கள்

லிசா, டேவிட் நடனத்தை பார்த்த நண்பர்களாலும், உறவினர்களாலும் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதனர். நடனமாடி முடித்த உடன் லிசா தனது தந்தைக்கு முத்தம் கொடுத்தார்.

மரணம்

மரணம்

டேவிட் கடந்த 2ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில் லிசா, டேவிட் நடனமாடும் வீடியோ இணைதயளத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்கவும், அதே சமயம் அழவும் வைக்கிறது.

இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களிலும் அழகிய கண்ணீர் வரும்

மரணப் படுக்கையில் தந்தை, மணக்கோலத்தில் மகள்: பார்ப்பவர்களை அழ வைக்கும் வீடியோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+