12 வயது சிறுவன்.. அலேக்காக வானில் தூக்கிச் சென்ற ராட்சத காற்றாடி.. பதற வைக்கும் வைரல் வீடியோ!
இந்தோனேசியாவில் 12 வயது சிறுவனை ராட்சத காற்றாடி வானில் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜகார்டா: இந்தோனேசியாவில் 12 வயது சிறுவனை ராட்சத காற்றாடி ஒன்று வானில் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் சிறுவன் ஒருவனை ராட்சத காற்றாடி ஒன்று அலேக்காக தூக்கிக்கொண்டு வானில் பறக்கிறது. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே சென்றதும், அந்த சிறுவன் காற்றாடி அறுந்து தொப்பேன கீழே விழுகிறான். இதனை ஏரானமானோர் கூடி நின்ற பார்க்கின்றனர்.

இந்த சம்பவம் இந்தோனேசிய நாட்டில் உள்ள சுமத்ரா தீவுகளில் உள்ள பிரிங்செவ் ரீஜென்சி, லாம்புங் எனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது. காற்றாடியால் தூக்கி செல்லப்பட்டு கீழே வீசப்பட்ட 12 வயது சிறுவனுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்கள் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுவனக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
அங்கு அவனுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications