தண்ணீர் குடிப்பதில் இப்டி ஒரு குறும்பா..ரசிக்க வைத்த லெமேகி..மறக்காம உங்க வீட்டு குட்டீஸ்ட்ட காமிங்க

நைரோபி: குட்டி யானை ஒன்று குறும்பாக தண்ணீர் குடிக்கும் வீடியோ ஒன்று இணையவாசிகளை அதிகளவில் கவர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நைரோபி: குட்டி யானை ஒன்று குறும்பாக தண்ணீர் குடிக்கும் வீடியோ ஒன்று இணையவாசிகளை அதிகளவில் கவர்ந்துள்ளது.

Recommended Video

    தண்ணீர் குடிப்பதில் இப்டி ஒரு குறும்பா..ரசிக்க வைத்த லெமேகி..மறக்காம உங்க வீட்டு குட்டீஸ்ட்ட காமிங்க

    விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அந்த விலங்குகளின் புத்திசாலித்தனத்தை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

    அதிலும் குறிப்பாக யானைகள் என்றால் அந்த வீடியோ ரொம்பவே ஸ்பெஷல் தான். யானைகள் செய்யும் சேட்டைகளை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு குறும்புக்கார யானை செய்த ஒரு சுட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     குறும்புக்கார குட்டி

    குறும்புக்கார குட்டி

    அந்த வீடியோவில் ஒரு யானைக்குட்டி தண்ணீர் தேடி வருகிறது. ஒரு குட்டி பள்ளத்தில் தண்ணீரை தேக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக ஒரு பிளாஸ்டிக் குழாய் போடப்பட்டிருக்கிறது. அதில் இருந்து அந்த பள்ளத்தில் குபுகுபுவென தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது.

    புத்திசாலி

    புத்திசாலி

    தண்ணீர் குடிக்க வரும் அந்த யானை முதலில் அந்த குட்டி குளத்தில் தண்ணீர் குடிக்கிறது. பின்னர் பக்கத்தில் இருக்கும் அந்த குழாயை பார்த்தவுடன், அந்த குழாயை லாவகமாக தும்பிக்கையால் தூக்கி தனது வாயில் செருகிக்கொள்கிறது. தண்ணீர் யானையின் வாயில் நேரடியாக சென்று விடுகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் யானையின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    வனவிலங்கு காப்பகம்

    வனவிலங்கு காப்பகம்

    இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் கென்யா. நைரோபி அருகே உள்ள ஷெல்ரிக் வனவிலங்கு காப்பகம். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அந்த யானைக்குட்டி தான் இது போன்ற சேட்டைகளை செய்து வருகிறது. இந்த குறுப்புக்கார யானையின் பெயர் லெமேகி. இது ஒரு பெண் யானை.

    சினிமா மாதிரி குட்டீஸுக்கு பிடிக்கும்

    சினிமா மாதிரி குட்டீஸுக்கு பிடிக்கும்


    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது ஏதோ ராமநாராயணன், தேவர் ஆகியோரின் படங்களைப் பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. ஊரடங்கால் வனவிலங்கு பூங்காக்களுக்கு செல்ல முடியவில்லையே என ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த வீடியோ குதூகலத்தை தரும் என்பதில் சந்தேகமேயில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+