என்னா நடிப்புய்யா… ச்சும்மா பிச்சு உதறிட்டா! – என்.எச்10ல் அனுஷ்காவை பார்த்து அரண்ட கோஹ்லி
மெல்போர்ன்: காதலி அனுஷ்கா சர்மா நடித்த படத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் விட்டாராம் இந்திய வீரர் விராத் கோஹ்லி. அனுஷ்கா நடித்துள்ள சமீபத்திய படமான என்எச் 10 படம்தான் கோஹ்லியைக் கவர்ந்து விட்டது.
இப்படத்தை மெல்போர்னில் வைத்துப் பார்த்துள்ளார் கோஹ்லி. இந்தியா நாளை, வங்கதேசத்தை காலிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ள நிலையில் அனுஷ்காவின் படத்தைப் பார்த்து "பூஸ்ட்" ஏற்றிக் கொண்டுள்ளார் கோஹ்லி.

இப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பை அபாரமாகவும், மிகச் சிறப்பாகவும் இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார் கோஹ்லி. அதேபோல நாளைய ஆட்டத்தில் கோஹ்லியின் ஆட்டமும் அபாரமாக, சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

இப்படம் குறித்து டிவிட்டரில் கருத்தும் போட்டுள்ளார் கோஹ்லி. அதில் இப்போதுதான் என்எச்10 பார்த்தேன். நான் தகர்ந்து போய் விட்டேன். என்ன ஒரு அருமையான படம். குறிப்பாக எனது அருமைக் காதலி அனுஷ்கா சர்மாவின் நடிப்பு பிரமாதம். பெருமையாக இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார் கோஹ்லி.
Just watched #NH10 and i am blown away. What a brilliant film and specially an outstanding performance by my love @AnushkaSharma. SO PROUD:)
— Virat Kohli (@imVkohli) March 17, 2015 அனுஷ்காவும், கோஹ்லியும் கடந்த பல மாதங்களாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக பாராட்டத் தயங்காதவர்கள்.

தற்போது ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைக்காக முகாமிட்டுள்ளார் கோஹ்லி. அவருக்கும்சரி, மற்ற வீரர்களுக்கும் சரி மனைவிகள், காதலிகளைச் சந்திக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி தரவில்லை. எப்படியோ அனுஷ்கா நடித்த படத்தைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாரே கோஹ்லி.. அந்த வகையி்ல் சரிதான்.
நாளைய போட்டியில் சமர்த்தாக ஆடி, அடித்து நொறுக்கி விளையாடி அனுஷ்காவின் பாராட்டுக்களை கோஹ்லி வாங்குவாரா.. பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications