தவளை, பூரானை விடுங்க.. புது அயிட்டத்தை இறக்கிய சீனர்கள்.. சிறுவர்களின் யூரினில் வேக வைத்த "முட்டை"
பீஜிங்: முட்டைகளில் ஆம்லெட், ஆஃப்பாயில், கலக்கி என விதவிதமாக சாப்பிட்டு இருக்கிறோம்.. ஆனால், சிறுநீரில் வேகவைத்த முட்டையை கேள்வி பட்டு இருக்கிறீர்களா?... சீனாவில் மிகவும் பிரபலமான இந்த உணவினை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
'விர்ஜின் பாய்ஸ் எக்’ என்ற வேகவைத்த முட்டை என்றால் என்ன? சீனர்கள் அதை விரும்பி சாப்பிடுவது ஏன்? என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

ஆசிய நாடுகளில் ஒன்றான சீனாவில் வசிக்கும் மக்கள் மத்தியில் சில வினோத பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன. 'உணவே மருந்து’ என்று நமது நாட்டு உணவுப் பொருட்களுக்கு நாம் சிறப்பிடம் தருவதுபோல், சீனர்களும் தங்கள் நாட்டு உணவை ஆரோக்கியமானத கருதுகிறார்கள்.
விர்ஜின் பாய்ஸ் எக்: சீனாவில் ஓடுவது பறப்பது என்று இல்லாமல் ஒருபடி மேலே போய் நாம் அருவருப்பாக பார்க்க கூடிய பல உயிரினங்களையும் பிடித்து வேகவைத்து சுடச்சுட ஒரு பிடி பிடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு தவளை, பாம்பு என ஒன்று விடாமல் ருசிக்க ருசிக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள்...
சீனர்களின் வினோத உணவு பழக்க வழக்கத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு போல இருப்பது.. அவர்கள் விரும்பி சாப்பிடும் "விர்ஜின் பாய் எக்" எனப்படும் வேக வைத்த முட்டை.. அது என்ன விர்ஜின் பாய் என்று புருவத்தை உயர்த்துகிறார்களா... இந்த வேக வைத்த முட்டையின் மேட்டரே அதில்தான் அடங்கியிருக்கிறதாம்.
சிறுநீரில் வேக வைத்த முட்டை: அதாவது, வசந்த காலம் என சொல்லப்படும் பிப்ரவரி - ஏப்ரல் மாத காலங்களில் இந்த உணவினை சீன மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.. இது ஸ்னாக்ஸ் மட்டும் இன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்கிறார்கள் சீனர்கள்.. சரி இந்த பெயர் காரணம் வருவதற்கு காரணமே அது தயாரிக்கப்படும் முறையில் தான் உள்ளது.
சிறுவர்களின் சிறுநீர்: சாதாரணமாக முட்டை என்றால் நாம் நீரில் வேக வைத்து சாப்பிடுவோம்.. சீனர்களின் இந்த "விர்ஜின் பாய்ஸ் எக்ஸ்" என்பது, இளம் வயதினரின் சிறுநீரில் ஊற வைத்து பிறகு அந்த சிறுநீரிலேயே வேக வைப்பது ஆகும். பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கர்களின் யூரினில் வேகவைத்து இந்த முட்டை தயாரிக்கப்படுகிறது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள டோங்யாங் என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது. முட்டையை வேகவைப்பதற்காக ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் சிறுநீரை பக்கெட் உள்ளிட்டவற்றில் சேகரித்து அங்குள்ள மக்கள் கொண்டு போய் விடுவார்களாம்.
மூட்டு வலிகள் நீங்கும்: பிறகு சிறுநீரில் ஊறவைத்து, பின்னர் வேகவைப்பார்களாம்... முட்டை வெந்த பிறகும் சில மணி நேரங்கள் சிறுநீரில் வேக வைப்பார்களாம். அதன் பிறகே இந்த முட்டையை சாப்பிடுவார்களாம். இந்த முட்டை சுவையாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார்கள் சீனர்கள்..
இது தொடர்பாக அங்குள்ள கடைக்காரர்கள் கூறுகையில், "இந்த முட்டையை நீங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு வெப்ப தாக்கு ஏற்படாது. மூட்டுகளில் ஏற்படும் வலிகள் நீங்கும். வாசனைக்காகவும் இந்த சிறுநீரில் முட்டையை வேக வைக்கிறோம். இங்குள்ள அனைவருக்கும் மதிய உணவில் இந்த விர்ஜின் பாய்ஸ் எக் கண்டிப்பாக இருக்கும்” என்றார்.
தவளை, பல்லி, பூரான்: விர்ஜின் பாய்ஸ் எக் சாப்பிடும் தகவலுக்கே மிரட்சி அடைந்து விடாதீர்கள்.. சீனர்களின் வினோத உணவு பழக்க வழக்கங்களின் லிஸ்டில் இன்னும் பல உணவுகள் உள்ளன. தவளை, நத்தை, வெட்டுக்கிளி, பூரான், பல்லி போன்றவற்றையும் சீன மக்களின் விருப்பமான உணவு ஆகும். நம்ம ஊரில் கோழிக்கறியை வெட்டி கடைகளில் தொங்க விடப்பட்டு இருப்பது போல சீனாவில் பூனைகளை வெட்டி கடைகளில் விற்பனைக்க்கு வைத்து இருப்பார்களாம்.
அனைத்துமே இயற்கையின் படைப்புகள். எனவே, உணவில் எந்த ஏற்றத்தாழ்வுகளோ முகம் சுளிப்பதற்கோ இல்லை என்கிறார்கள் சீனர்கள். அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் சாப்பிடுகிறார்கள். இதை எப்படி அருவருப்பாக பிறர் பார்க்க முடியும் என்பது பொதுவான கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications