குழந்தைகளுடன் கசமுசா... 1000 ‘பீடோபிலியா’ மனிதர்களை அடையாளம் காட்டிய ‘ஸ்வீட்டி’
தி ஹேக்: கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட 10 வயது சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள 1000க்கும் மேற்பட்டோர் அலை மோதியுள்ளனர். இந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சிறுமியை வைத்து இவர்களை வலை வீசிப் பிடித்து நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு போலீஸில் மாட்டி விட்டுள்ளது.
சிறார்கள் மீது வரும் செக்ஸ் மோகத்திற்கு பீடோபிலியா என்று பெயர். இப்போது வளரும் நாடுகளில் இந்த பிரச்சினை அதிகரித்தவண்ணம் உள்ளது. அவ்வாறு பீடோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டறியும் விதமாக கம்யூட்டர் சிறுமி மூலம் வலை விரித்தனர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பினர்.
அதில் பின்வரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளனவாம்....

ஹாய் ஸ்வீட்டி....
அந்த கிராபிக்ஸ் சிறுமிக்கு ஸ்வீட்டி என்று பெயர். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சிறுமி இந்த கிராபிக்ஸ் உருவம். நெதர்லாந்தைச் சேர்ந்த டெர்ரி டெஸ் ஹோம்ஸ் என்ற சிறார் உரிமை அமைப்புதான் இதை உருவாக்கியது.

1000 விண்ணப்பங்கள்....
இதுகுறித்து நெதர்லாந்து அமைப்பின் தலைவரான ஆல்பர்ட் ஜாப் வான் சான்ட்பிரிங் கூறுகையில், சிறார்களை பாலியல் ரீதியாக சீரழிக்கும் செயல் இது. இந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சிறுமி உருவத்துடன் உறவு கொள்ளவும், வெப் காம் மூலம் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடவும் 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

குற்றவாளிகள்...
இவர்களை அடையாளம் கண்டு அவர்கள் குறித்த விவரத்தை போலீஸில் தெரிவித்துள்ளோம். உலகம் முழுவதும் இப்படிப்பட்ட பாலியல் நடவடிக்கைளால் பல்லாயிரக்கணக்கான சிறார்கள், குறிப்பாக சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தவே இந்த ஸ்வீட்டி உருவத்தை நாங்கள் உருவாக்கினோம்.

வெப்காம் செக்ஸ் சுற்றுலா....
இத்தகைய வெப்காம் செக்ஸ் சுற்றுலாவைத் தடுக்க வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். ஆனால் இதை எந்த அரசும் செய்யாமல் உள்ளது வருத்தம் தருகிறது என்றார்.

20,000க்கும் அதிகமானோர்....
ஸ்வீட்டி கிராபிக்ஸை இணையத்தில் அறிமுகப்படுத்திய 10 வாரத்துக்குள்ளாகவே 71 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் அதை அணுகியுள்ளனராம்.

பெரும்பாலான தந்தைகள்....
இந்த 20,000 பேரில் பலர் குழந்தைகளுக்குத் தந்தைகளாக உள்ளவர்கள். அதில் அட்லாண்டாவைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தந்தையான 35 வயது நபர், ஸ்வீட்டி உடையைக் கழற்றுவதைப் பார்த்து ரசிக்க 10 டாலர் தருவதாக கூறியுள்ளார்.

அலட்சியம்....
சாட் மூலம் இந்த சிறுமியுடன் பேச வைத்து, அவர்கள் குறித்த விவரங்களை நெதர்லாந்து அமைப்பு சேகரித்துள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை என்பது சற்றும் இல்லையாம்.

பெரிய மனிதர்கள்...
சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வக்கிரப்புத்தி கொண்டவர்கள் வரிசையில் பெரும் பணக்காரர்கள், இசைக் கலைஞர்கள் உள்பட சமூகத்தின் சகல தரப்பினரும் இடம் பெற்றிருப்பது வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதுமாக உள்ளதாகவும் சான்ட்பிரிங் கூறினார்.

இந்தியர்களும்....
இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் நிறையவே இடம் பெற்றுள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications