வண்ண வண்ண இலைகள்.. இலையுதிர் கால மரங்கள்.. இடையே ஒரு வாக்கிங்... !
சிகாகோ: நம்ம ஊரில் வெயில் காலம், மழைக்காலம், குளிர் காலம் அவ்வளவு தான். ஆனால் மேலை நாடுகளில் அவங்க தட்பவெட்ப நிலைக்கேற்ப வெயில் காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் அப்புறம் வசந்த காலம் அப்படின்னு 4 காலங்கள் இருக்கிறது.
அந்த நான்கு காலத்திலேயும் ரொம்ப அழகானானது இலையுதிர் காலம் தான். அப்படியான ஒரு இலையுதிர் காலத்தில தான் நம்ம ஊர்க்காரங்க சினிமா ஷூட்டிங்கு அங்கு படையெடுத்து போவாங்க.
பச்சை நிறமே பச்சை நிறமேன்னு அலைபாயுதே படத்தில் வருகிற பாடல் மாதிரி நிறைய பாடல்கள் அங்கு அந்த இலையுதிர் காலத்தில படமாக்கப்பட்டது தான். செப்டம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கிறது இலையுதிர் காலம். அந்த காலகட்டத்திலே மெல்ல மெல்ல பச்சை இலைகள் வண்ணம் மாற தொடங்குகிறது.

நவம்பரில் முழு நிறம்
அது அப்படியே அக்டோபர் இறுதி நவம்பர் ஆரம்பத்தில் முழு நிறத்தை அடைகிறது. சில ஆரஞ்சு, மஞ்சள், சில பிரவுன், சில பிங்க் என்று பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

நெடுந்தூர டிரைவ் அழகு
அதிக வெயிலின் காட்டம் குறைந்து அப்படியே மெல்ல லேசாக லேசாக குளிர் பரவி அப்படியே இலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் மாறுவதை பார்த்துக் கொண்டே ஒரு அழகான நெடுந்தூர டிரைவ் போகலாம் அல்லது மனசுக்கு நெருக்கமாணவர்களின் கைகோர்த்து ஒரு நடை போடலாம்.

அழகிய நிறங்கள்
இலைகளில் சிகப்பு மஞ்சள் பிங்க் என்று பல வண்ணங்கள் பார்த்துக் கொண்டு அழகான அந்த இலையுதிர்கால மரங்களின் அழகை ரசித்துக் கொண்டே ஒரு குட்டி நடைபயணம் உங்களுக்கு போகணும்னா இந்த விடியோவை கட்டாயம் பாருங்க.
சிகாகோ கேத்தரின் காடுகள்
இந்த அனுபவம் படமாக்கப்பட்ட இடம்: கேத்தரின் சேவலியர் காடுகள், சிகாகோ ,அமெரிக்கா. ஸோ நீங்களும் சிகாகோ என்றால் Go and Enjoy!.. மற்றவர்கள் அந்த அனுபவத்தைப் பெற வீடியோவை கிளிக் பண்ணிப் பாருங்க... https://youtu.be/78pqIxP3PPg ... பச்சை நிறமே பச்சை நிறமே.. என்று மனதுக்குள் பாடி மகிழுங்கள்!
- Inkpena சஹாயா
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications