ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: 'முதுகில் குத்திவிட்டார்கள்' புதின் ஆவேசம் !
அங்காரா: சிரிய நாட்டின் எல்லையில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய செயலை முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோபமாக தெரிவித்துள்ளார்.
சிரிய நாட்டின் எல்லை அருகே பறந்த ஜெட் போர் விமானத்தை, தருக்கியைச் சேர்ந்த இரு எப்-16 ரக போர் விமானங்கள் வானிலேயே இன்று காலை சுட்டு வீழ்த்தின. ஐந்து நிமிஷ இடைவெளியில் 10 முறை ரஷ்ய போர் விமானம் அத்துமீறி துருக்கி எல்லையில் பறந்ததாக, துருக்கி அதிகாரிகள் கூறினர். ஆனால், அத்துமீறி துருக்கி எல்லைக்குள் பறக்கவில்லை என ரஷ்ய அதிகாரிகள் இதை மறுத்துள்ளன.

சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.
இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தீவிரவாதிகளை மட்டுமே எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த செயலை 'முதுகில் குத்திவிட்டார்கள்' என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது.
இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சம்பவம் பற்றி கவனத்துடன் ஆராயப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
மேலும் ரஷ்ய போர் விமானம் சிரியாவின் எல்லைக்குள்ளாகத்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கள் விமானிகள் துருக்கிக்கு எதிராக எந்த செயல்களிலும் ஈடுப்படவில்லை" என்று புதின் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications