ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் கைது? வாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்.. பரபர உத்தரவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்த நிலையில் இன்னும் இருநாட்டு வீரர்களும் சண்டையிட்டு வருகின்றனர்.
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து வருகிறது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான் போர் குற்றத்தை புரிந்ததாக கூறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் போர் நடவடிக்கையாக உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பல ஆயிரம் பலியாகி உள்ளன.

செவிசாய்க்காத ரஷ்யா
இருப்பினும் உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள், மக்கள் ஒன்றிணைந்து ரஷ்யாவை எதிர்த்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவிலும் பல ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர். அதேபோல் உக்ரைன் நாட்டு மக்களும், ராணுவ வீரர்களும் பலியாகி வருகின்றனர்கள். இந்த போர் நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் ரஷ்யா செவிசாய்க்கவில்லை.

போர்குற்றம் புரிவதாக..
இந்நிலையில் தான் ரஷ்ய படையினர் மீதும் உக்ரைன் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் படையானது பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுகிறது. படை வீரர்கள் உக்ரைன் பெண்களை மிரட்டில் வன்புணர்வு செய்கின்றனர் என தொடர்ச்சியாக குற்றங்களை சுமர்த்தி வருகிறது. அதோடு போர் விதிகளை மீறி ரஷ்யா பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் செய்ய்ப்பட்டுள்ளன.

புதினுக்கு கைது வாரண்ட்
இந்நிலையில் தான் உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

காரணம் என்ன?
அதாவது உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்படுவது தொடர்பான புகார்கள் எழுந்தன. இது போர்க்குற்றம் என உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது. இந்த புகார் பற்றி விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்றம் என தெரிவித்து புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications