எங்கள் மீது பொருளாதார தடை? மிதக்கும் “ஸ்பேஸ் ஸ்டேசன்” இங்கதான் விழும்.. மேப் போட்டு மிரட்டும் ரஷ்யா
மாஸ்கோ : ரஷ்யா மீதான மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் ( international space station - iss) விபத்துக்குள்ளாகும் என ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 15 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் மக்கள் மிக அவதியடைந்துள்ளனர். பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தீவிரமாக போர் தொடர்ந்து வருகிறது.
உக்ரைனுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ள நிலையில், நேரடியாக போரிடாவிட்டாலும் ஆயுதங்கள், நிதியுதவி என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றனர்.

உக்ரைன் போர்
போர் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டாலும் ரஷ்யப் படைகளால் இதுவரை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்ற முடியவில்லை. மிகச்சிறிய அளவிலான ராணுவ படையை கொண்டு இருந்த போதிலும் உக்ரைனின் அதிரடி மற்றும் துல்லிய தாக்குதல் காரணமாக ரஷிய வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருபோதும் ஆயுதங்களை கீழே விடப் போவதில்லை எனவும் தங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

பொருளாதார தடை
ஆயுதங்களை கைவிட்டு விட்டு வந்தால் தான் பேச்சுவார்த்தை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உறுதியாக கூறியுள்ள நிலையில் உங்களுக்கு ஆதரவாக பல நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல அந்நாட்டின் பங்கு சந்தைகளும் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டன. ஏற்கனவே கடும் விலைவாசி பிரச்சினையில் சிக்கித் தவித்து வரும் ரஷ்யாவில் பணமதிப்பு வீழ்ச்சி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் - ஐஎஸ்எஸ்
இந்நிலையில் ரஷ்யா மீதான மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் ( international space station - iss) விபத்துக்குள்ளாகும் என ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசினின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள ரோகோசினின், " இந்த பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷிய விண்வெளி கப்பல்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதன் விளைவாக, விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷிய பிரிவு பாதிக்கப்படலாம், இதனால் 500-டன் கட்டமைப்பு கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் கடல் அல்லது நிலத்தில் வந்து விழும்" என கூறியுள்ளார்.

ரஷ்யா மிரட்டல்
பொருளாதார தடைகள் ISSக்கு சேவை செய்யும் ரஷ்ய விண்கலத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கும் எனவும், இதன் விளைவாக, நிலையத்தின் ர சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் பிரிவு பாதிக்கப்படலாம், இதனால் 500-டன் கட்டமைப்பு "கடலில் அல்லது நிலத்தில் கீழே விழும்" என்று Roscosmos தலைவர் டெலிகிராமில் எழுதியுள்ளார். ISS கீழே விழக் கூடிய இடங்களின் வரைபடத்தை வெளியிட்ட அவர், அது ரஷ்யாவில் விழ வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டினார். மற்ற நாடுகள் ரோஸ்கோஸ்மோஸுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் காரணமாக கொடுக்க வேண்டியிருக்கும் விலையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், பொருளாதார தடைகளை விதித்த நாடுகளை "பைத்தியம்" என்றும் விமர்சித்தார்.

வீரர்கள் திரும்புகின்றனர்
கடந்த மாதம் ட்விட்டரில் மேற்கத்திய நாடிகள் பொருளாதார தடைகளை விதித்த போதும் , ரோகோசின் இதேபோல் விண்வெளி நிலையம் பூமியில் விழும் அச்சுறுத்தலை எழுப்பினார். இந்நிலையில் வரும் மார்ச் 30 அன்று, அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் மற்றும் இரண்டு விண்வெளி வீரர்களான அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ஆகியோர் சோயுஸ் விண்கலத்தில் ISS இல் இருந்து பூமிக்குத் திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications