மிக மிக ஆபத்து! மனித குலத்திற்கே "தீங்கு".. அணு ஆயுத போர் பற்றி வாரன் பஃப்பெட் தந்த 7 பெரிய வார்னிங்
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் மீது அணு ஆயுத போர் தொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட் அணு ஆயுத போர் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் 6வது பெரிய பணக்காரர் வாரன் பஃப்பெட். இவர் தனது வருவாயில் பெரும் பகுதியை அணு சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் ஆராய்ச்சிக்கு செலவிட்டு வருகிறார். இவரின் நியூக்ளியர் திரெட் அமைப்பு மூலம் 100 மில்லியன் டாலரை சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு வாரன் பஃப்பெட் கொடுத்துள்ளார்.
இந்த நிறுவனம்தான் உலகம் முழுக்க அணு சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பல நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

7 எச்சரிக்கைகள்
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் நடக்கும் நிலையில் அணு ஆயுதம் பற்றி வாரன் பஃப்பெட் கொடுத்த 7 முக்கியமான எச்சரிக்கைகள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
1. உலகம் தற்போது எதிர்கொண்டு இருக்கும் மிகப்பெரிய ஆபத்தே அணு ஆயுதம், பயோ ஆயுதம் மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள்தான். இது வாரன் 2002ல் கொடுத்த எச்சரிக்கை.

அணு ஆயுதம்
2. அணு ஆயுதம் என்பது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். எப்போதுமே மனித குலத்தில் தீயவர்கள் இருந்துள்ளனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மதத்தை வைத்து மோதல்களை செய்துள்ளனர். அப்போதெல்லாம் அணு ஆயுதம் இல்லை. இதனால் அழிவுகள் பெரிதாக இல்லை. அதன்பின் வில் அம்புகள், துப்பாக்கிகள் வந்தன. அது கூட பிரச்சனை இல்லை. 1945ல்தான் உலகம் அணு ஆயுதத்தின் ஆபத்தை நேரில் பார்த்தது. அதன்பின் உலகில் மனித குலத்தை ஒரு நொடியில் ஆற்றல் உருவானது, அது மிகவும் ஆபத்தானது. (2006ல் சொன்னது)

வாரன் பஃப்பெட்
3. பாட்டிலுக்குள் அடைபட்டு கிடந்த பூதம் வெளியே வந்துவிட்டது. இதனால் மனித குலத்திற்கு எப்படி எல்லாம் தீங்கு விளைவிக்கலாம் என்பதை மக்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள் . அது ஈரானாக இருக்கலாம் அல்லது வேறு தீவிரவாத இயக்கமாக இருக்கலாம். ஆனால் நாம் மிக மிக மிக மிக மிக ஆபத்தான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நான் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். (2008ல் சொன்னது)
4. C-N-B-Cயை தவிர வேறு பெரிய பிரச்சனை நமக்கு கிடையாது. C-N-B-C என்றால் cyber, nuclear, biological, chemical ஆகும். இந்த நான்கு ஆயுதங்கள்தான் மனிதர்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படுத்தும். 1945ல் நடந்ததை விட அதிக அபாயத்தை ஏற்படுத்தும்ஆயுதங்கள் நம்மிடம் இப்போது உள்ளன (2016ல் சொன்னது)

பெரிய தீங்கு
பெரிய தீங்கு
5. அணு, பயோ, கெமிக்கல், சைபர் போர்களை நாம் தடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதை 5 சதவிகிதம் தடுக்கும் வித்தையை நாம் கற்றால் கூட போதும். நான் என்னுடைய பணத்தை எல்லாம் அதில் முதலீடு செய்வேன் ( 2016ல் சொன்னது)
6. முறையாக திட்டமிட்டால் அணு ஆயுத போர் போன்ற விஷயங்களை 99.99 சதவிகிதம் தடுக்க முடியும். ஆனால் விதிப்படி என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும். அதை தடுக்க முடியாது (2016ல் சொன்னது)

மக்கள் அழிவு
7. 1945ல் முதல் அணு குண்டு போடப்பட்ட நாளில் இருந்தே எனக்கு அச்சம் இருக்கிறது. நாம் அதன்பின் 72 வருடங்கள் முன்னேறிவிட்டோம். உலகம் முழுக்க அணு ஆயுத திறன்கள் வளர்ந்துவிட்டது. உலகை ஒரு நொடியில் அழிக்கும் ஆற்றல் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. (2017ல் சொன்னது). வாரன் பஃப்பெட் கொடுத்த இந்த 7 எச்சரிக்கைகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications