2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லாரியே வெல்வார்: நம்பர் 3 கோடீஸ்வரர் வாரன் பப்பட்
கலிபோர்னியா: 2016 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் நிச்சயம் வெல்வார் என கணித்துள்ளார் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பப்பட்.
அமெரிக்காவின் பார்ச்யூன் பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் தொடர்பாக மாநாடு ஒன்று நடத்தியது. அதில், போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த வாரன் பப்பட் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘2016ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஹில்லாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார். இதற்காக பந்தயம் கட்டக் கூட நான் தயார் என்று கூறியுள்ளார்.
ஐஸ்கிரீம் முதல் இன்ஸ்யூரன்ஸ் வரை பலவிதமான தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வாரன் பப்பட் இவ்வாறு கூறியுள்ளதால், அமெரிக்காவில் ஹில்லாரி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அதிபர் தேர்தலுக்கான போட்டிக்கு பொருத்தமான நபர் ஹில்லாரி என்று கூறப்பட்டாலும் கூட, அவர் இது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications