"ஜூராசிக் வேர்ல்டு" ஹீரோவை "டரியலாக்கிய" குட்டி டைனோசர்... ஒரு கலகல வீடியோ!
நியூயார்க்: ஜூராசிக் வேர்ல்டு படத்தில் ஹீரோவாக நடித்த கிரிஸ் பிராட், குட்டி டைனோசர்களை நிஜத்தில் பார்த்து டரியலாகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை அதில் நடிக்கும் நடிகர்களின் சொந்தக் குணமாக நம்பும் பழக்கம் நம் மக்களிடையே உள்ளது. அந்த வகையில் ஹீரோவாக இருப்பவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகத் தான் இருப்பார், வில்லன் நிஜவாழ்க்கையிலும் வில்லன் தான் என்ற மாய பிம்பம் உள்ளது.
இந்நிலையில், ஜூராசிக் வேர்ல்ட் படத்தில் குட்டி குட்டி டைனோசர்களுக்கு பயிற்சி தரும் ஹீரோ, நிஜத்தில் டைனோசர்களைப் பார்த்தால் எப்படி மெர்சலாகிறார் என்பதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஜூராசிக் வேர்ல்ட்...
கடந்த வாரம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது ஜூராசிக் வேர்ல்ட் ஹாலிவுட் படம். இப்படத்தின் ஹீரோ கிறிஸ் பிராட். இவர் குட்டி குட்டி டைனோசர்களுக்கு பயிற்சி கொடுக்கும் சூப்பர் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
குட்டி டைனோசர்...
இந்நிலையில், பட ஷூட்டிங்கிற்காக ஸ்டூடியோவிற்குள் வரும் கிறிஸ்ஸை டெக்னிக்கல் டீம் குட்டி டைனோசர்களைக் காட்டி பயமுறுத்திய காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.

வைரல்...
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. இதுவரை 37 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர்.

பயந்து... நடுங்கி...
ஸ்டூடியோவிற்குள் நுழையும் கிறிஸ்ஸை ஒளிந்திருக்கும் இரண்டு குட்டி டைனோசர்கள் பயமுறுத்துகின்றன. அடுத்தடுத்து திடீர் என எண்ட்ரியாகும் டைனோசர்களைப் பார்த்து பயந்து போகிறார் கிறிஸ்.

பாராட்டு...
பின்னர் சுதாரித்து எழுந்து டெக்னிக்கல் டீமை திட்டிக் கொண்டே, பாராட்டுகிறார். பின் எங்கெங்கு கேமரா வைக்கப் பட்டு இந்தக் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன என விசாரிக்கிறார்.

சாதனை நடை...
தியேட்டர்களில் ஒருபுறம் ஜூராசிக் வேர்ல்ட் வசூல் மழை பொழிந்து சாதனை நடை போட்டுக் கொண்டிருக்க, இணையத்தில் இந்த வீடியோவுக்கான கிரேஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications