5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி பூமியை நோக்கி விழும் ரஷ்ய விண்கலம்!
நியூயார்க்: சர்வதசே விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அது தோல்வியடைந்து தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம், ஒவ்வொரு 5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட் மூலம் எம் 27 எம் என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலமானது பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமைதான் விண்ணுக்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது அந்த விண்கலம் வேகமாக கீழே வந்து கொண்டிருக்கிறது. அதன் வேகத்தைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விண்கலம் 5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டிருப்பதாக மாஸ்கோவில் உள்ள விண்கலத்துக்கான செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலத்துக்கு அருகே 44 வகையான சிதறல்கள் இரு்ப்பதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த சிதறல்கள், விண்கலத்திலிருந்து வந்தவையா அல்லது வேறா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்ட் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ‘ரஷ்ய விண்கலம் மெதுவாக பூமியை நோக்கி விழும் என்று நான் நம்புகிறேன். மேலும் அது பூமியின் வளிமண்டலத்தை அடைந்ததுமே எரிந்து சாம்பலாகி விடும். அதன் சிதறல்கள்தான் பூமிக்கு வரும்' என்று கூறியுள்ளார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவர்.
இதற்கிடையே, இந்த விண்கலத்தின் கதி என்ன எந்பது குறித்து நாசா உறுதியாக எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. இதுபோன்ற சப்ளை விண்கலங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போய் விட்டுத் திரும்பும்போது பூமிக்கு வரும் வழியிலேயே சிதறுண்டு போவது வழக்கமானது தான் என்பதால் நாசா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதை நாசா செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி ஷியர்ஹோல்ஸும் ஆமோதிக்கிறார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications