வைகோவைத் தவிர வேறு எந்தத் தலைவருமே நம்ம ஊரில் இப்படி செய்யவே முடியாது!
வாஷிங்டன்: நம்ம ஊரில் எல்லாம் இதெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும். ஸ்டண்ட் ஆகவே இருந்தாலும் கூட இதையெல்லாம் நிஜத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு அட்டகாசமான வாக் போய் குடிமக்களுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்துள்ளார் - வாஷிங்டனில்.
படு சாவாதனமாக கழற்றி விட்ட கோட்டைத் தூக்க தோளில் போட்டபடி ஹாயாக ஒரு பார்க்குக்குள் புகுந்து சுதந்திரமாக நடமாடிய அவர் அங்கு வந்திருந்த பொதுமக்களுடன் கை குலுக்கியும், ஜாலியாக பேசியும், போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தும், அவர்களிடம் நலம் விசாரித்தும், அங்கிருந்த பொட்டிக் கடைப் பெண்ணிடம் ஜாலியாக பேசியும், குட்டீஸ்களுக்கு கிப்ட் கொடுத்தும் கலக்கியுள்ளார்.
ஒபாமாவின் இந்த திடீர் வருகையால் அங்கிருந்தோர் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டனர்.

வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு வாக்
தனது அலுவலகம் அமைந்துள்ள வெள்ளை மாளிகையிலிருந்து அருகில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்குச் சென்ற ஒபாமாக வழியில் உள்ள ஒரு பூங்கா வழியாக செல்ல முடிவெடுத்தார் - அதாவது நடந்தே.

மரபாவது .. மண்ணாவது..
அதாவது மரபை மீறி அவர் நடந்து போனார். கூடவே பாதுகாவலர்களும் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால் ஒபாமாவை சுதந்திரமாக நடக்க விட்டு, சற்று தொலைவில்.

மக்களுடன் சந்திப்பு
நடந்து போகும்போது ஆங்காங்கே உட்கார்ந்திருந்தோர், அரட்டை அடித்தோர், நடந்து போனோர், கடை வியாபாரிகள் என பார்த்துப் பார்த்த ஹாய், ஹலோ என்று கூறியபடி ஜாலியாக பேசினார் ஒபாமா. கை குலுக்கினார், நலம் விசாரித்தார், வியாபாரம் எப்படிப் போகிறது என்று விசாரித்தார். மாணவர்களிடம் படிப்பு எப்படி இருக்கு என்று அக்கறை காட்டினார்.

நிஜம்மாவே நீங்க ஒபாமாவா பாஸ்...
அவர் திடீரென வந்து ஹாய் சொல்லி நின்றபோது ஒரு நடுத்தர வயதுப் பெண் ஆச்சரியத்தில் நீங்கள் நிஜமாகவே ஒபாமாவே என்று குதூகலித்துப் போனார். அவரை கட்டிப்பிடித்து ஆமாம் என்று கூறிச் சிரித்தார் ஒபாமா. பின்னர் அந்தப் பெண்மணியுடன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

நம்ம ஊரில் சாத்தியமே இல்லை
நம்ம ஊரில் ஜனாதிபதியை இப்படி தெருவிலோ, பார்க்கிலோ பார்க்கவே முடியாது.. அப்படி சந்திக்கக் கூடிய ஒருவர் இருந்தார்.. ஆனால் அவரைக் கூட சுதந்திரமாக நடக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் கட்டிப் போட்டிருந்தது...
என்னவோ தெரியவில்லை.. இந்த ஒபாமாவைப் பார்த்தபோது வைகோ ஞாபகம்தான் வருகிறது.. அவரால் மட்டுமே இப்படி இயல்பாக இருக்க முடியும் என்றுதான் தோன்றியது.... இப்போதைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications