தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முன்பு கதறி அழுத தீவிரவாதி: வீடியோ இதோ
ராக்கா: சிரியாவில் உள்ள ஃபுவா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் கதறி அழுத வீடியோ வெளியாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் ஜாபர் அல் தய்யார். அவர் சிரியாவில் அரசை எதிர்த்து அல் கொய்தாவுடன் சேர்ந்து போராடும் இமாம் புகாரி ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர். அவர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஃபுவா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகளால் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முன்பு கதறி அழுத வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் விபரம் வருமாறு,
சக தீவிரவாதிகள் அவரை கட்டித்தழுவி வாழ்த்தி வெடிகுண்டுகள் நிறைந்த வாகனத்தில் ஏற்றிவிட்டனர். வாகனத்தில் ஏறியதும் அவர் கதறி அழத் துவங்கினார். இதை பார்த்த பிற தீவிரவாதிகள் அவரை தேற்றினர்.
ஜாபர், என் சகோதரரே பயப்படாதீர்கள். பயந்தால் அல்லாஹ்வை நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு தீவிரவாதி தெரிவித்தார். அதற்கு ஜாபரோ, எனக்கு பயமாக உள்ளது. நான் என் முயற்சியில் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை என்றார்.
பின்னர் ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பிய அவர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. ஆனால் இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விபரம் தெரியவில்லை.
ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையே பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications